தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / lifestyle

கூகுள் பிக்சல் 3a ஸ்மார்ட்போனின் முக்கிய விபரங்கள் கசிந்தது - new mobile

கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 3 ஸ்மார்ட்போன் அடிப்படையிலான குறைந்த விலை கூகுள் பிக்சல் 3ஏ விபரங்கள் கசிந்துள்ளன. இதன் மூலம் பிக்சல் 3ஏ அலைபேசி விற்பனைக்கு வருவது உறுதியாகியுள்ளது.

Leaked Google Pixel 3A Smartphone

By

Published : Apr 7, 2019, 5:34 PM IST

கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 3 திறன்பேசி அடிப்படையிலான குறைந்த விலை கூகுள் பிக்சல் 3ஏ-யின் விபரங்கள் கசிந்துள்ளன. இதன் மூலம் பிக்சல் 3ஏ அலைபேசி விற்பனைக்கு வருவது உறுதியாகியுள்ளது. இதுகுறித்து, பல்வேறு தகவல்கள் முன்பு வெளிவந்த நிலையில் தற்போது மிகப்பெரிய தேடுதல் தளம் தனது பக்கத்தில் வெளியிட்ட தகவலின் அடிப்படையில் புதிய பிக்சல் 3ஏ, பிக்சல் 3ஏ எக்ஸ்.எல் ஆகிய இரு ரகங்கள் மே மாதம் விற்பனைக்கு வருவது உறுதியாகியுள்ளது.

கூகுள் நிறுவனம் 2019 I/O நிகழ்வை மே மாதம் 7ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை நடத்த திட்டமிட்டுள்ளதால் இந்த நிகழ்வில் புதிய ஆண்ட்ராய்டு Q இயங்குதளம் உட்பட பல்வேறு வசதிகள் கூடிய பிக்சல் கைப்பேசிகளை வெளியிட உள்ளது. ஸ்னாப்டிராகன் 670 ரக பிராசஸர்கள் வழங்கப்படும் என்று நம்பப்படுகிறது. மேலும், இரு ரகங்களிலும் 5.6 இன்ச், 6.0 இன்ச் OLED தொடுதிரை, 12 எம்.பி. பின்பக்க புகைப்படக் கருவி வழங்கப்படலாம் எனக் கருதப்படுகின்றது.

ABOUT THE AUTHOR

...view details