தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / lifestyle

டிவி கொடுத்தால் மொபைல் இலவசம் - lava z62

லாவாவின் புதிய பட்ஜெட் மொபைல் போனாக அந்நிறுவனம் லாவா இசட்62 (Z62) என்ற புதிய ஸ்மார்ட் போனை நேற்று வெளியிட்டது.

லாவா Z62

By

Published : Jun 15, 2019, 1:36 PM IST

இந்திய மொபைல் போன் நிறுவனமான லாவா - பட்ஜெட் மொபைல் போன்களுக்கு பெயர்பெற்றது. தனது ஸ்மார்ட் போன்கள் வரிசையில் புதிதாக லாவா இசட்62 என்ற புதிய மொபைல் போனை நேற்று வெளியிட்டுள்ளது.

லாவா இசட் வரிசையில் வெளியாகியுள்ள இந்த போன், 6 இன்ச் தொடுதிரையைக் கொண்டது. 3,380mah மின்கலம் (Battery) கொண்ட இது பின்புறம் 8 மெகா பிக்சல் கேமராவையும் முன்புறம் 5 மெகாபிக்சல் கேமாராவையும் கொண்டுள்ளது. இருபுறமும் எல்.இ.டி. ஃபிளாஷ் அமைக்கப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பு.

2 ஜி.பி. ரேமையும் 16 ஜி.பி. உள்ளடக்க சேமிப்புத்திறன் (Storage) கொண்ட இது மீடியாடெக் ஹிலியோ ஏ22 இயங்குதளத்தில் இயங்குகிறது. ஆண்ட்ராய்டு பை 9இல் (Pie 9) இயங்கும் இந்த போனின் சேமிப்புத்திறனை 256 ஜி.பி. வரை அதிகரிக்கஇயலும்.

லாவாவின் புதிய எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்

இந்தியாவில் இந்த போன் 6,060 ரூபாய் விற்பனை செய்யப்படவுள்ளது. அறிமுக சலுகையாக வீட்டில் உள்ள பழைய தொலைக்காட்சியைக் கொடுத்தால் எக்ஸ்சேஞ்ச் ஆஃபரில் வாடிக்கையாளர்களுக்கு புதிய லாவா இசட் 62 வழங்கப்படவுள்ளது. தொலைக்காட்சி எந்த நிலையிலிருந்தாலும் எக்ஸ்சேஞ்ச் ஆஃபரில் ஏற்கப்படும் என்று லாவாவின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கான முன்பதிவு வரும் ஜூன் 18ஆம் தேதி காலை 10 மணிக்குத் தொ

டங்கவுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details