இந்தியாவில் மிகப்பெரிய ஸ்மார்ட் ஃபோன் நிறுவனமான சியோமி அடுத்த ஆண்டில் மட்டும் பத்துக்கும் மேற்பட்ட 5G ஸ்மார்ட் ஃபோன்களை வெளியிடத் திட்டமிட்டுள்ளதாக சியோமி தலைவர் லீ ஜுன் தெரிவித்துள்ளார்.
சீனாவில் சர்வதேச இணையக் கருத்தரங்கத்தில் பங்கேற்ற அவர், "5G மொபைல் ஃபோன் மாடலான Xiaomi Mi 9 Pro 5G-க்கு சர்வதேச அளவில் நாங்கள் எதிர்பார்த்ததை விட பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது" என்று குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசியவர், "வரும் ஆண்டுகளில் 4G ஸ்மார்ட் ஃபோன்களின் விற்பனை வெகுவாக குறையும் என்பதால் டெலிகாம் நிறுவனங்களும் தங்களது 5G தொழில்நுட்ப விரிவாக்கத்தை வேகப்படுத்த வேண்டும்" என்றும் கூறினார்.