ஆண்ட்ராய்ட் ஓப்பன் சோர்ஸ் ப்ராஜக்ட் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட, நோக்கியாவின் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன் நோக்கியா எக்ஸ் சீரிஸ் ஆகும். பெரும் எதிர்பார்ப்புடன் நீண்ட காலத்திற்கு பிறகு வெளியான இந்த நோக்கியா எக்ஸ் ஸ்மார்ட்போன் விற்பனையில் சரிவை சந்தித்தது. இந்நிலையில், நோக்கியாவின் தனித்துவமான எக்ஸ் இயங்குதளத்தில் புதிய மாற்றங்களை செய்து விரைவில் புதிதாக 5 பட்ஜெட் ஸ்மார்ட்போன்களை வெளியிட நோக்கியா திட்டமிட்டுள்ளது. விண்டோஸ் ஸ்மார்ட்போன் விற்பனையில் தனி இடம் இருந்தாலும், தற்போது உள்ள ஆண்ட்ராய்டு காலத்திலும் அதன் முத்திரையை பதிக்கவே முயற்சி செய்து வருகிறது.
நோக்கியா எக்ஸ் சிறப்பு அம்சங்கள் - 1 இந்த நோக்கியா எக்ஸ் இயங்குதளத்தில் ஸ்மார்ட்போன்களில் ஆண்ட்ராய்டு செயலிகள் பதிவேற்றம் செய்திட நோக்கியா ஸ்டோர் வழங்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, பிளாக்பெர்ரி மொபைல் மூலம் பிரபலமன பிபிஎம் என்ற மெசேஜ் வசதி பிரத்யேகமாக நோக்கியா எக்ஸ் இயங்குதளத்திற்கு வழங்குப்பட்ட வந்த நிலையில், விண்டோஸ் 8 தளத்திற்கு வழங்கப்பட்டுள்ளன.
அதே போல், அடோப் ஃபோட்டோஷாப் எக்ஸ்பிரஸ், ஃபேஸ்சியூன் மற்றும் ஜே.யு.எஸ்.பி, இன்ஸ்டாகிராம், வைன் போன்ற முதன்மை செயலிகளும், கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ: சான் ஆண்ட்ரியாஸ், சப்வே சர்ஃபர்ஸ் போன்ற பிரபலமான கேம்ஸ்களும் நோக்கியா எக்ஸில் பயனர்களுக்காக வருகிறது. விண்டோஸ் 8இல் இமெஜ் எடிட்டிங்காக நோக்கியா பிரத்யேகமாக தயாரித்துள்ள நோக்கியாவின் இமேஜிங் எஸ்.டி.கே 1.1 செயலியும், நோக்கியா எக்ஸில் இடம்பெற்றிருக்கும் எனக் கூறப்படுகிறது. இது ஏற்கனவே விண்டோஸ் 8,விண்டோஸ் 8.1 டேப்லேட்டில் பயன்பாட்டில் உள்ளன.
நோக்கியா எக்ஸ் சிறப்பு அம்சங்கள் - 2 இதுகுறித்து பேசிய நோக்கியாவின் டெவலப்பர் குழுவின் துணைத் தலைவரும் பொது மேலாளருமான பிரையன் பினியாக், " விண்டோஸ் செல்போன்களுக்கு சந்தையில் நல்ல வரவேற்பு உள்ளது. எங்கள் லூமியா ஸ்மார்ட்போன்களின் நம்பமுடியாத வேகத்தை நாங்கள் தொடர்ந்து காண்கிறோம். இப்போது, நோக்கியா எக்ஸ் சீரிஸில் புதிய சாதனங்களை அறிமுகப்படுத்தியதன் மூலம், நாங்கள் அதே வடிவமைப்பு, தரம் மற்றும் புதுமைகளை வழங்கவுள்ளோம். இதன் மூலம் ஸ்மார்ட்போன் சந்தையில் வேகமாக வளர்ந்து நோக்கியாவின் பழைய இடத்தை விரைவாக அடைந்திட முடியும்" என தெரிவித்தார்.