தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / lifestyle

500 ரூபாய் இருக்கா இந்தா 4ஜி போன் வச்சிக்கோ... ஜியோ அதிரடி!

விரைவில் விற்பனைக்கு வரவிருக்கும் ஜியோ போன் நெக்ஸ்ட் 4ஜி ஸ்மார்ட்போனை, வெறும் 500 ரூபாய் கொடுத்து வாங்கிக்கொள்ளலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Jio Phone Next
ஜியோ

By

Published : Sep 3, 2021, 2:05 PM IST

Updated : Sep 3, 2021, 4:47 PM IST

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கடந்த ஜூன் மாதத்தில் நடைபெற்ற ரிலையன்ஸ் ஏஜிஎம் மாநாட்டில் ஜியோ போன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போன் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

இந்த ஸ்மார்ட்போன் வரும் செப்டம்பர் 10ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. இதன் முன்பதிவு இந்த வாரம் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ஸ்மார்ட்போனின் விலை, விற்பனை அமைப்பு ஆகியவை குறித்து அதிகாரப்பூர்வ வெளியீட்டுக்கு முன்னரே தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் இரண்டு மாடல்களில் வெளியாகிறது. நமக்குக் கிடைத்த தகவலின்படி, அவற்றில் ஒன்று ஜியோ போன் நெக்ஸ்ட் பேசிக் மாடல், மற்றொன்று ஜியோபோன் நெக்ஸ்ட் அட்வான்ஸ் மாடல் ஆகும்.

ஜியோ 4ஜி போன்

பேசிக் மாடல் சுமார் 5,000 ரூபாய்க்கும், அட்வான்ஸ் மாடல் 7 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எப்படி இதை 500,700க்கு வாங்கலாம்?

இந்த ஜியோ போனை, முழு தொகை செலுத்தி வாங்கவேண்டிய அவசியமில்லை என்றும் மாறாக முதலில் 10 விழுக்காடு தொகையை மட்டுமே செலுத்தினால் போதுமானது எனவும் தகவல் வெளியாகியுள்ளது. அதன்பின், மீதி பணத்தை ஈசி-இஎம்ஐ விருப்பங்கள் மூலமாக செலுத்திக்கொள்ளலாம்.

எனவே, ஜியோ போன் நெக்ஸ்ட் 4ஜி ஸ்மார்ட்போனை வெறும் 500 ரூபாய் கொடுத்து வாடிக்கையாளர்கள் வாங்கிக்கொள்ளலாம். அதேபோல், அட்வான்ஸ்டு மாடலை வெறும் 700 ரூபாய்க்கு வாங்கலாம்.

ஜியோ நிறுவனம் அடுத்த ஆறு மாதங்களில் 50 மில்லியன் யூனிட்களை விற்பனை செய்ய இலக்கு வைத்துள்ளது.

ஜியோ 4ஜி போன்

உத்தேச ஜியோ 4ஜி போன் அம்சங்கள்

  • 5.5 இன்ச் ஹெச்.டி டிஸ்பிளே
  • 3ஜிபி ரேம்
  • கூகுள் அசிஸ்டன்ட் சப்போட்
  • கைரேகை சென்சார்
  • குவால்காம் QM215 பிராசஸர்
  • 4000mah பேட்டரி

இந்நிலையில், தற்போது, வெளியாகியுள்ள அனைத்து தகவல்களும் உண்மையா என்பது ஜியோ ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வ வெளியீட்டிற்கு பிறகே தெரியவரும்.

இதையும் படிங்க:கூகுள் பே செயலியில் நிலையான வைப்புத்தொகை சேவை அறிமுகம்

Last Updated : Sep 3, 2021, 4:47 PM IST

ABOUT THE AUTHOR

...view details