பிரபல சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான விவோவின் இணை நிறுவனமான ஐகூ கடந்த பிப்ரவரி மாதம் ஐகூ 3 என்ற ஸ்மார்ட்போனை வெளியிட்டது. ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர், 4440mah பேட்டரி என அட்டகாசமான வசதிகளுடன் வெளியான ஐகூ 3 ஸ்மார்ட்போனுக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.
இதனால் ஐகூ நிறுவனத்தின் அடுத்த ஸ்மார்ட்போன் மாடலுக்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்நிலையில், ஐகூ நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போன் மாடலான iQOO Neo 3 5G-இன் வெளியீட்டுத் தேதியை தற்போது அறிவித்துள்ளது. சீனாவில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி வெளியாகவிருக்கும் இந்த ஸ்மார்ட்போனின் சில அம்சங்கள் குறித்த தகவல்களும் வெளியாகியுள்ளன.