இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "இனி ஐஓஎஸ் (iOS) பயனாளிகள் காரின் திரை அல்லது கடிகாரத்தின் மூலம் கூகுள் வரைபடங்களின் உதவியுடன் பாதுகாப்பாகவும் எளிதாகவும் செல்ல முடியும்.
மேலும் காரில் உள்ள திரையில், ஒருவர் வரைபடம் மூலம் பயணிக்கும் போது, தங்களுக்கு பிடித்த பாடல்கள் மாற்றலாம், காரின் பின்புறம் உள்ள கேமராவின் காட்சிகளை பார்க்கலாம். காலண்டர் உள்ளிட்ட மற்ற வசதிகளையும் ஒரே நேரத்தில் பார்த்துக் கொள்ளலாம்.