தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / lifestyle

இந்தியாவில் ஸ்மார்ட்போன் விற்பனை அதிகரிப்பு: கரோனாவால் மலிவான செல்போன்களில் ஆர்வம்காட்டும் பயனர்கள்! - பண்டிகை கால விற்பனை

பண்டிகை கால விற்பனை தொடங்கியுள்ள சூழ்நிலையில், இந்த காலாண்டில் ஸ்மார்ட்போன் விற்பனை 14 விழுக்காடு அதிகரித்துள்ளதாகவும், கரோனாவால் மலிவான செல்போன்கள் வாங்க அதிகளவில் மக்கள் ஆர்வம் காட்டுவதாக ஆய்வு அறிக்கையில் தெரியவந்துள்ளது.

ஸ்மார்ட்போன்
ஸ்மார்ட்போன்

By

Published : Nov 5, 2020, 6:28 PM IST

கரோனா தொற்று ஊரடங்கால் பெரும்பலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஸ்மார்ட்போன் விற்பனை விகிதம் இரட்டிப்பாக உயர்ந்துள்ளது. சுமார் 14 விழுக்காடு விற்பனை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. மொத்த வளர்ச்சியை கணக்கிட்டதில் விற்பனை அதிகரித்திருந்தாலும், நடுத்தர மக்கள் மத்தியில் கரோனா ஏற்படுத்திய தாக்கம் குறையவில்லை.

பண்டிகை காலத்தை முன்னிட்டு பல நிறுவனங்கள் கையாண்ட கிரியேட்டிவ் மார்க்கெட்டிங் மற்றும் கவர்ச்சிகரமான விளம்பரங்கள், தள்ளுபடிகள் ஆகியவை ஸ்மார்ட்போன் சந்தையில் விற்பனையை சூடுபிடிக்கவைத்தது

சி.எம்.ஆர். Q3 2020இன் மொபைல் ஹேண்ட்செட் சந்தை ஆய்வு அறிக்கையின்படி, "செப்டம்பர் காலாண்டில் சாம்சங் சிறந்த ஸ்மார்ட்போன் பிராண்டாகவும் சிறந்த மொபைல் பிராண்டாகவும் உருவெடுத்துள்ளது. மலிவு விலை ஸ்மார்ட்போன் முதல் பிரீமியம் செல்போன்களை வரை பல ரகங்களை வெளியிட்டுள்ளது" தெரியவருகிறது

இது குறித்து சி.எம்.ஆர். தொழில் நுண்ணறிவுக் குழு ஆய்வாளர் ஷிப்ரா சின்ஹா கூறுகையில், "கரோனா தொற்று அச்சத்தால் மக்கள் ஆன்லைன் ஷாப்பிங் பக்கம் தங்களது கவனத்தை செலுத்திவருகின்றனர். பண்டிகை காலங்களில் 70 சதவீதத்திற்கும் மேலான ஸ்மார்ட்போன் விற்பனை ஆன்லைனில்தான் நடைபெற்றுள்ளது" எனத் தெரிவித்தார்.

கிடைத்த தகவலின்படி, கோவிட் -19 கட்டுப்பாடுகள் மற்றும் விநியோக சங்கிலி சிக்கல்கள் காரணமாக பிரபல சியாமி நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் ஏற்றுமதி பின்னடவை சந்தித்து இரண்டாவது இடத்தில் உள்ளது.

விவோ மூன்றாவது இடத்தில் நின்றது, அதன் வி மற்றும் ஒய் சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் ஏற்றுமதி 7 விழுக்காடு அதிகரித்துள்ளது. ரியல்மி ஏற்றுமதி 13 விழுக்காடு அதிகரித்துள்ளது.

ரியல்ம் சி 11, ரியல்ம் சி 6, ரியல்ம் 5 ஐ மற்றும் ரியல்மே சி 3 ஆகியவை அடங்கும், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ரியல்மே 7 அதன் மொத்த விற்பனையில் 50 விழுக்காடு பங்களிப்பு கொடுத்துள்ளது. 5ஜி திறன்கொண்ட ஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்போன் விற்பனையில் முதலிடம் வகிக்கிறது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details