தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / lifestyle

அறிமுகத்திற்கு முன்னரே முன்பதிவுக்கு தயாரான ஹூவாய் P30 லையிட்! - ஹூவாய் P30 லையிட்

ஹூவாய் நிறுவனம் சார்பில் நேற்று பாரிஸ் நகரத்தில் நடந்த ஒரு விழாவில் P30 வரிசை ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டனர். ஆனால் ஹூவாய் P30 லையிட் வகை ஸ்மார்ட்போன் இந்த அறிமுக விழாவில் இடம்பெறாத நிலையில் பிலிப்பைன்சில் இன்று முன்பதிவுக்கு தயாராகியுள்ளது.

ஹூவாய் P30 லையிட்

By

Published : Mar 28, 2019, 9:08 AM IST

இந்த தயாரிப்பு ஹூவாய் நிறுவனத்தின் P30, P30 ப்ரோ கைப்பேசியைப் போல் மூன்று பின்புற கேமராக்களை கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் ஹைசிலிக்கான் கிரீண் 710 SoC மற்றும் வாட்டர் டிராப் ஸ்டையில் நாட்ச் வசதியை கொண்டுள்ளது.

ஹூவாய் P30 லையிட் விலை:


தற்போதைக்கு பிலிப்பைன்சில் மட்டுமே இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகியுள்ள நிலையில், ரூ.22,200 மதிப்புடையது. மேலும் இந்த ஹூவாய் P30 லைட் ஸ்மார்ட்போன் மிட்நைட் பிளாக், பீகாக் புளூ மற்றும் பியேரல் வைட் நிறங்களில் வெளியாகுகிறது.

ஏப்ரல் 4 ஆம் தேதி விற்பனையை துவங்கும் இந்த ஸ்மார்ட்போன் அமேசான் மற்றும் ஷாபீ தளங்களில் தற்போதைக்கு முன்பதிவை துவங்கியுள்ளது. இந்த தயாரிப்புடன் 8 ஜிபி ரேம்/ 512 ஜிபி சேமிப்பு வசதிகொண்ட ஹூவாய் P30 மற்றும் ஹூவாய் P30 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் ரூ.62,200 வரை விற்பனை செய்யப்படவுள்ளது.

ஹூவாய் P30 லைட் அமைப்புகள்:


ஹூவாய் நிறுவனத்தின் சார்பில் பிலிப்பைன்சில் வெளியான இந்த ஹூவாய் P30 லையிட் ஆண்டுராய்டு 9 பைய் அப்டேட் 6.5 இஞ்ச் ஹெச்டி திரையுள்ளது. மேலும் ஹையசிலிக்கான் கிரீண் 710 SoC மற்றும் வாட்டர் டிராப் ஸ்டைலில் நாட்ச் வசதியை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

6 ஜிபி ரேம் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் பின்புற கேமராவில் 24, 8 மற்றும் 2 மெகா பிக்சலை கொண்டுள்ளது. அதேபோல் 32 மெகா பிக்சல் முன்புற கேமரா சென்சாரை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சேமிப்பு வசதியை பொருத்தவரை இந்த ஸ்மார்ட்போனில் 128 ஜிபி இடம்பெற்றுள்ளது. மேலும் பின்புறத்தில் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் மற்றும் 3,340mAh பேட்டரி வசதி போன்ற பல அம்சங்களை இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details