தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / lifestyle

கூகுள் மீட்டில் இனி பேக்ரவுண்டை நமக்குப் பிடிச்ச மாதிரி மாத்திக்கலாம்!

கூகுள் மீட்டின் பயனாளர்கள் தங்களுக்குப் பிடித்த வண்ணம் பேக்ரவுண்டை மாற்றிக் கொள்ளும் வசதியை கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது.

கூகுள் மீட்டில் இனி பேக் கிராவுண்டை நமக்கு பிடிச்ச மாதிரி மாத்திகலாம்!
கூகுள் மீட்டில் இனி பேக் கிராவுண்டை நமக்கு பிடிச்ச மாதிரி மாத்திகலாம்!

By

Published : Nov 2, 2020, 5:37 PM IST

உலகின் மாபெரும் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான கூகுள் தனது வீடியோ காலிங் தளமான கூகுள் மீட்டில் ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி கூகுள் மீட் பயனர்கள் இப்போது காணொலி கலந்தாய்வின்போது அவர்களின் பேக்ரவுண்டில் ஒரு புகைப்படத்தை வைக்கலாம்.

இதன்மூலம் தங்களது தேவைகளுக்கு ஏற்றவாறு அவர்கள் வைத்திருக்கும் புகைப்படங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். எடுத்துக்காட்டாக அலுவலக காணொலி கலந்தாய்வில் உள்ளபோது அலுவலக செட்டப்பில் புகைப்படத்தைப் பயன்படுத்தியும், காதலர்களுக்கு இடையேயான உரையாடல் என்றால் அதற்கு ஏற்றார்போல் தங்களது புகைப்படங்களைத் தேர்ந்தெடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஆனால் கல்விக்காக கூகுள் மீட்டை பயன்படுத்தும் பயனாளர்களால் இந்த வசதியில் தங்களது சொந்த படங்களைத் தேர்ந்தெடுக்கும் வசதி கிடையாது எனக் கூகுள் தெரிவித்துள்ளது.

  1. புகைப்படத்துடன் பேக்ரவுண்டை மாற்றும் வசதி தற்போது டெஸ்க்டாப் பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது.
  2. இது ஆண்ட்ராய்டு மற்றும் iOS மொபைல் பயனர்களுக்கு கிடைக்கவில்லை. இருப்பினும், இது கூடிய விரைவில் அனைவருக்கும் வரும் என்று கூறப்படுகிறது.
  3. இந்த வசதி மூலம் உங்கள் ஆளுமையை நிரூபிக்கவும், உங்கள் சூழலை மறைக்கவும் உதவும்.
  4. இந்த வசதியைப் பயன்படுத்திக்கொள்ள வேறு எந்த மென்பொருளும் (Software) தேவையில்லை.

இது குறித்து கூகுள் தலைமை நிர்வாக அலுவலர் சுந்தர் பிச்சை கூறுகையில், "கூகுள் மீட்டில் தினசரி 235 மில்லியன் பயனாளர்கள் பயன்படுத்துவதால், அவர்களுக்கு இது உதவும்” எனக் கூறியுள்ளார்.

இந்த வசதிகள் பிரபல வீடியோ கான்பரன்சி செயலிகளான ஜூம், மைக்ரோசாஃப்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க...யுபிஐ பரிவர்த்தனைகள் 80% அதிகரிப்பு - நிதி ஆயோக் தலைவர்

ABOUT THE AUTHOR

...view details