அல்ப்பாபேட் (Alphabet) நிறுவனத்தின் அடுத்த மொபைல் மாடல்களான Google Pixel 4 மற்றும் Pixel 4 XL ஆகியவை கடந்த வாரம் நியூயார்கில் அறிமுகம் செய்யப்பட்டது. ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், 90hz டிஸ்பிளே, ஆண்டிராய்டு 10 இயங்குதளம் என்று பல அட்டகாசமான சிறப்பம்சங்களுடன் இந்த மொபைல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த மொபைலின் முக்கிய அம்சமே இதிலுள்ள சோலி ரேடார் சிப். மொபைலை தொடாமலேயே நமது கையசைவுகளின் மூலம் வரும் கால்களை கட் செய்வது, பாடல்களை மாற்றுவது போன்ற பல செயல்களை மேற்கொள்ளலாம்.
இப்படி ஏகப்பட்ட சிறப்பம்சங்களை கொண்ட Pixel 4, Pixel 4 XL மொபைல்கள் வெளியாகும் 53 நாடுகள் பட்டியலில் இந்தியா இல்லை. இது இந்திய கூகுள் ரசிகர்களுக்குப் பேரிடியாக அமைந்தது.
கூகுளின் அடுத்த மொபைல்போன் இந்தியாவுக்கு வராது!
கூகுள் நிறுவனத்தின் அடுத்த மொபைல்போன் மாடல்கள் இந்தியாவுக்கு விற்பனைக்கு வராது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
google pixel 4
இதையும் படிங்க: பெரு நிறுவனங்களுக்கு டிஜிட்டல் பண பரிவர்த்தனைக்கு கட்டணம் இல்லை!