ஜெர்மனி இசைப்பரம்பரையிலிருந்து வந்தவர் ஜொஹன் கிறிஸ்டியன் பச். இவர் இசையில் பல செயல்முறை ஆராய்ச்சிகளை செய்து, அதில் வெற்றியும் கண்டுள்ளார். இதனால் இவர் இசையின் முன்னோடியாக கருதப்படுகிறார்.
நெட்டிசன்களை இசையமைப்பாளராக்கும் கூகுள் டூடுல்! - கூகுள் டூடுள்
ஜெர்மன் இசையமைப்பாளர் ஜொஹன் கிறிஸ்டியன் பச் (Johann Christian Bach) பிறந்த நாளை சிறப்பிக்கும் விதமாக கூகுள், டூடுல் வைத்து கொண்டாடியுள்ளது.
google doodle
இந்நிலையில் ஜொஹன் பிறந்த நாளான இன்று, கூகுள் தனது டூடுலில் அவரின் புகைப்படத்தை வைத்து சிறப்பித்துள்ளது. இதில் ஒரு படி மேலே போய் நெட்டிசன்களை இசையமைப்பாளராக்கும் முனைப்பிலும் கூகுள் டூடுல் இறங்கியுள்ளது. அந்த டூடுலில் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, நெட்டிசன்களை இசை அமைக்க கீபோர்டும் வைத்துள்ளது.