சான் பிரான்சிஸ்கோ (அமெரிக்கா):ஆப்பிள் நிறுவனம், புதிய மடக்கும் திறன்கொண்ட ஐஃபோன் கைபேசிகளை விரைவில் அறிமுகப்படுத்தும் என டெக் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனுடன் ஆப்பிள் ஸ்டைலஸ் எனும் எழுத்தாணி உடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மடிக்கக்கூடிய 7.3 அல்லது 7.6 அளவு கொண்ட ஓ-லெட் திரை இதில் இருக்க வாய்ப்பிருக்கிறது. மேலும், ஐபேட் வரிசையில் புத்தக வடிவிலும் ஒரு டேப்லெட்டை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்த திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மைக்ரோசாஃப்ட் எக்ஸ்- பாக்ஸ் வயர்லெஸ் ஹெட்செட் சிறப்பம்சங்கள்!
ஆப்பிளின் இந்த படைப்புகள் சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி Z ஃபிளிப், புதிய மோட்டோ ரேசர் ஆகிய ஸ்மார்ட் கைபேசிகளுக்கு போட்டியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆப்பிளின் புதிய கைபேசி தயாரிப்பு பணிகள் சீனாவில் உள்ள ஃபாஸ்கான் தொழிற்சாலையில் நடைபெற வாய்ப்புள்ளது.
மேலும், இந்த புதிய தயாரிப்புகள் சந்தைக்கு வரும்போது, ஐபேட் மினி டேப்லெட் தயாரிப்பை ஆப்பிள் நிறுவனம் நிறுத்திக்கொள்ள திட்டமிட்டிருக்கிறது.