தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / lifestyle

விவோ ஒய் 51 ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்!

சீனாவின் விவோ நிறுவனத்தின் 2020இன் புதிய எடிஷனாக ஒய்51 ரக கைப்பேசி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நினைவூட்டும் வண்ணம், இந்த கைப்பேசி ஒரே பெயரின் கீழ் வெவ்வேறு ரகங்களாக பாகிஸ்தான், இந்தோனேசியா ஆகிய இரு நாடுகளிலும் அறிமுகப்படுத்தப்பட்டது.

Vivo Y51 features, Vivo Y51 price, Vivo Y51 specs, Vivo Y51 launch date, Vivo Y51 launch latest news, vivo new launches, vivo y series, latest tech news, december gadget launches, விவோ ஒய்51 ஸ்மார்ட்போன், விவோ ஒய் 51 சிறப்பம்சங்கள், விவோ ஒய் 51 விலை
விவோ ஒய் 51

By

Published : Dec 7, 2020, 8:42 PM IST

டெல்லி:விவோ ஒய்51 (2020) கைப்பேசி இந்தியாவில் ரூ.17,990க்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த கைப்பேசியானது, 5,000 எம்ஏஎச் மின்கலத் திறன் (பேட்டரி), குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 SoC செயல் திறன், 48 மெகாபிக்சல் முதன்மைப் படக்கருவி, 1 டெரா பைட்வரை சேமிப்புத் திறன் விரிவாக்கும் வசதி போன்ற பிரதான அம்சங்களை கொண்டு வெளிவந்துள்ளது.

நோக்கியாவின் 2 புதிய ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம்!

விவோ ஒய் 51 (2020) சிறப்பம்சங்கள்

  • 6.58 அங்குல முழு அளவு எச்டி + தொடுதிரை (1080x2408 திரை அடர்த்தியுடன்)
  • டியூ டிராப் நாட்ச்
  • 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
  • ஸ்னாப்டிராகன் 665 செயல்திறன்
  • 8 ஜிபி ரேம் / 128 ஜிபி அளவிலான சேமிப்புத் திறன்
  • 1டிபி வரை எஸ்டி கார்டு கொண்டு சேமிப்பகத்தை விரிவாக்கும் வசதி
  • பின்பக்க கேமரா: 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார் (எஃப் / 1.79 லென்ஸ்) + 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை சென்சார் (எஃப் / 2.2 லென்ஸ்) + எஃப் / 2.4 லென்ஸ் லென்ஸ் + 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார்
  • முன்பக்க கேமரா:எஃப் / 2.0 லென்ஸ் கொண்ட 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா
  • 18வாட் அதிவிரைவு மின்னூட்டும் திறன்
  • 5000 எம்ஏஹெச் மின்கல சேமிப்புத் திறன்
  • ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்ட ஃபன்டச் ஓஎஸ் 11
  • ப்ளூ டூத் 5.0
  • 4 ஜி எல்டிஇ
  • இரட்டை சிம்
  • இணைப்பு வசதிகள்: ஜிபிஎஸ், க்ளோனாஸ், பெய்டூ, யூ.எஸ்.பி டைப்-சி
  • அளவீட்டில் 163.86 x 75.32 x 8.38 மிமீ
  • எடை:188 கிராம்
  • விலை:ரூ.17,990

ABOUT THE AUTHOR

...view details