டெல்லி:விவோ நிறுவனத்தின் ஒய் 20ஜி ரக ஸ்மார்ட் கைப்பேசி இந்தியாவில் வெளியானது.
விவோ ஒய் 20ஜி பட்ஜெட் ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்! - தொழில்நுட்பச் செய்திகள்
விவோ நிறுவனத்தின் ஒய்-சீரிஸின் கீழ் புதிய இணைப்பாக விவோ ஒய் 20ஜி ஸ்மார்ட் கைப்பேசி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது 6 ஜிபி + 128 ஜிபி சேமிப்பு வசதி கொண்டது. ரூ.14,990ஆக சந்தையில் அறிமுகபடுத்தப்பட்டுள்ளது.
விவோ ஒய் 20ஜி
விவோ ஒய் 20ஜி ஸ்மார்ட் கைப்பேசி அப்சிடியன் கறுப்பு, பியூரிஸ்ட் நீலம் என்கிற இரண்டு வண்ணங்களில் வருகிறது.
விவோ ஒய் 20ஜி அம்சங்கள்
- 6.51 அங்குல ஹாலோ ஐவியூ எச்டி+ தொடுதிரை, 20: 9 (1600 x 720) தெளிவுத்திறன்
- ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி 80 ப்ராசசர்
- ஆண்ட்ராய்டு 11
- பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார்
- பின்பக்க படக்கருவி: எஃப் / 2.2 லென்ஸுடன் 13 மெகாபிக்சல் முதன்மை சென்சார் + எஃப் / 2.4 லென்ஸுடன் 2 மெகாபிக்சல் போர்ட்ரெய்ட் சென்சார், 2 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர்
- முன்பக்க படக்கருவி: எஃப் / 1.8 லென்ஸுடன் 8 மெகாபிக்சல் சென்சார்
- 18வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் 5,000 எம்ஏஎச் மின்கல திறன்
- டூயல் 4 ஜி VoLTE, 2.4GHz / 5GHz வைஃபை, ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ்
- மைக்ரோ யூ.எஸ்.பி 2.0