கரோனா தொற்று காரணமாக மார்ச் முதல் உலகின் பல்வேறு நாடுகளிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக டெக் உலகிலும் பல்வேறு நிறுவனங்களும் தங்கள் ஸ்மார்ட்போன் வெளியீடுகளைத் தள்ளி வைத்தன.
தற்போது, சீனா உட்பட பெரும்பாலான நாடுகளில் கரோனா தொற்றின் தாக்கம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பல நாடுகளில் ஊரடங்கும் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் சாம்சங், சியோமி, கூகுள், ரியல்மி என பல நிறுவனங்களும் தங்களது புதிய ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சாம்சங் நிறுவனம் கடந்த வாரம் காணொலிக் காட்சி வழியாக நடைபெற்ற விழாவில் தனது புகழ்பெற்ற கேலக்ஸி நோட் வரிசையில் இரண்டு ஸ்மார்ட்போன்களை வெளியிட்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி நோட் 20 அல்டிரா சிறப்புகள்
- 6.70 இன்ச் அமோலெட் டிஸ்பிளே
- ஸ்னாப்டிராகன் 865+ பிராசஸர்
- பின்புறம் 108 மெகாபிக்சல் கேமரா + 12 மெகாபிக்சல் கேமரா + 12 மெகாபிக்சல் கேமரா
- முன்புறம் 10 மெகாபிக்சல் கேமரா
- 5ஜி வசதி
- 4500mah பேட்டரி
- பாதுகாப்பிற்கு முன்புறமும் பின்புறமும் கொரில்லா க்ளாஸ் வசதி
- ஆண்ட்ராய்டு 10ஐ மையாகக் கொண்டு இயங்கும் சாம்ச் ஒன் இயங்குதளம்