டெல்லி: ரெட்மி தனது புதிய ரெட்மி 9 பவர் கைப்பேசியை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
ரெட்மி 9 பவர் சிறப்பம்சங்கள் - ரெட்மி 9 பவர் சிறப்பம்சங்கள்
சீனாவின் சியோமி நிறுவனத்தின் கிளை நிறுவனமான ரெட்மி இந்தியாவில் அதன் புதிய ஸ்மார்ட் ரெட்மி 9 பவர் கைப்பேசியை அறிமுகம் செய்துள்ளது. ரெட்மி 9 பவர் 4 ஜிபி + 64 ஜிபி ரூ.10,999 க்கும், 4 ஜிபி + 128 ஜிபி ஆனது ரூ.11,999 க்கும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Redmi 9 Power
இது மைட்டி கறுப்பு, ஃபியரி சிவப்பு, எலக்ட்ரிக் பச்சை, பிளேசிங் நீலம் ஆகிய நான்கு வண்ண விருப்பங்களின் கிடைக்கிறது. அமேசான் தளம், மி பிரத்யேக தளம், மி பிரத்யேக கடை தொகுப்புகளில் டிசம்பர் 22ஆம் தேதி முதல் இந்த கைப்பேசி வாங்க கிடைக்கும் என்று நிறுவனம் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
ரெட்மி 9 பவர் கைப்பேசி அம்சங்கள்
- 6.53 அங்குல முழுஅளவு எச்டி + தொடுதிரை
- 2340 x 1080 திரை தீர்மானம்
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு
- ஸ்னாப்டிராகன் 662 செயல்திறன்
- 4 + 64 ஜிபி / 128ஜிபி - மைக்ரோ எஸ்.டி. கொண்டு 512 ஜிபி சேமிப்பை விரிவாக்கும் வசதி
- பின்பக்க படக்கருவி - 48 மெகாபிக்சல்கள் அளவிலான முதன்மை சென்சார் + 8 மெகாபிக்சல்கள் அல்ட்ரா-வைட் லென்ஸ் + 2 மெகாபிக்சல்கள் டெப்த் சென்சார்
- முன்பக்க படக்கருவி - 8 மெகாபிக்சல் செல்பி சென்சார்
- 6000mAh எம்ஏஎச் மின்கலத் சேமிப்பு திறன், 18 வாட் விரைவான மின்னூக்கியுடன்
- ஆண்ட்ராய்டு 10இல் கட்டமைக்கப்பட்ட MIUI 12 இயங்குதளம்
- இரட்டை 4ஜி வோல்டிஇ,
- வைஃபை 802.11 ஏசி (2.4GHz + 5GHz)
- ப்ளூடூத் 5
- ஜிபிஎஸ் + க்ளோனாஸ்
- 3.5 மிமீ ஹெட்ஃபோன் ஜாக்