மைக்ரோமாக்ஸ் நிறுவனத்தின் புதிய தயாரிப்பான 'மைக்ரோமாக்ஸ் இன் 1' (Micromax IN 1) ஸ்மார்ட்போன் இந்தியச் சந்தையில் அறிமுகமாகியுள்ளது. ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பு கொண்ட இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை விலையாக ரூ.9,999 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மைக்ரோமாக்ஸ் இன் 1 ஸ்மார்ட்போன் வரும் மார்ச் 26ஆம் தேதி மதியம் 12 மணிமுதல் micromaxinfo.com வலைதளத்திலும், பிளிப்கார்ட் இ-காமர்ஸ் தளத்திலும் விற்பனைக்கு வருகிறது.
மைக்ரோமாக்ஸ் இன் 1 ஸ்மார்ட்போன் சிறப்பு அம்சங்கள்:
- 6.67 இன்ச் அளவிலான ஃபுல்-எச்டி டிஸ்பிளே
- ஆண்ட்ராய்டு 10
- மீடியாடெக் ஹீலியோ ஜி 80 SoC பிராசஸர்
- 48 எம்பி முதன்மை சென்சார் + 2-எம்பி டெப்த் சென்சார் + 2 எம்பி மேக்ரோ கேமரா என மூன்று பின்புற கேமராக்கள்
- 8 எம்பி செல்பி கேமரா
- மைக்ரோ எஸ்.டி. கார்டு வழியாக 256 ஜிபி வரை விரிவாக்கம்
- 5000mah பேட்டரி
- 18W பாஸ்ட் சார்ஜிங் வசதி