தைபே (தைவான்): எச்டிசி நிறுவனம் தனது புதிய டிசைர் 21 புரோ 5ஜி ரக ஸ்மார்ட் 5ஜி கைப்பேசியை அறிமுகப்படுத்தியுள்ளது.
தைவானை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவரும் எச்டிசி நிறுவனம், கைப்பேசி சந்தையில் தனக்கென தனி இடம் பதித்திருந்தது. இச்சூழலில், புதிய பரிணாம தொழில்நுட்பங்களைக் கொண்டு பல நிறுவனங்கள் தங்களின் கைப்பேசிகளை சந்தைகளில் விற்பனைக்கு கொண்டு வந்த நேரம், இந்நிறுவனம் பெருத்த அடியைச் சந்தித்தது.
2020ஆம் ஆண்டின் சிறந்த ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள்!
தற்போது ஸ்மார்ட் கைப்பேசியின் தேவை அதிகரிப்பதைத் தொடர்ந்து, தனது புதிய டிசைர் 21 புரோ 5ஜி ரக கைப்பேசியை எச்டிசி நிறுவனம் சந்தையில் வெளியிட்டுள்ளது.
எச்டிசி டிசைர் 21 புரோ 5ஜி சிறப்பம்சங்கள்:
- 6.7 அங்குல முழு அளவு எச்டி+ எல்சிடி தொட்டுதிரை, 2400 x 1080 திரை அடர்த்தியுடன்
- 20:9 திரை அளவு, 90 ஹெர்டஸ் ரிஃப்ரெஷ் ரேட்டுடன்
- ஸ்னாப்டிராகன் 690 சிப்செட் செயல்திறன் + அட்ரினோ 619 ஜிபியு
- ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்துடன் எச்டிசி பிரதான கருப்பொருள்
- பின்பக்க படக்கருவி: 48 மெகா பிக்சல் முதன்மை சென்சார்+ 8 மெகா பிக்சல் அல்ட்ரா வைட் சென்சார் + 2 மெகா பிக்சல் மேக்ரோ சென்சார் (நெருக்கமாக சென்று படம்பிடிக்க) + 2 மெகா பிக்சல் டெப்த் சென்சார் (படம் தெளிவாக பதிவாக)
- முன்பக்க படக்கருவி: 16 மெகா பிக்சல் சென்சார்
- பவர் பொத்தானில் கைரேகை சென்சார்
- 8 ஜிபி ரேம் (செயல்திறன் சேமிப்பு) + 128 ஜிபி சேமிப்பகம்
- 5ஜி இணைப்பு, இரட்டை விசை வைஃபை, புளூடூத் 5.0, ஜிபிஎஸ்
- 5000mAh மின்கலத் திறன் 18 வாட் விரைவு மின்னூக்கியுடன் வெளிவருகிறது