தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / lifestyle

ஃபேஸ்புக் களமிறக்கும் புது வடிவிலான இலவச கேமிங் செயலி! - பேஸ்புக் கேமிங் ஆப்

ஃபேஸ்புக் நிறுவனம் புதிய கேமிங் செயலியை நிறுவ திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் பயனர்கள் இணைய விளையாட்டை நேரலையாக விளையாடவும், பார்க்கவும் முடியும் என்று கூறியுள்ளது. முதலில் ஆண்ட்ராய்டு இயங்குதள பயனர்களுக்கு மட்டும் இந்த வசதி கிடைக்கும் என்று நிறுவன தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

facebook gaming app
facebook gaming app

By

Published : Apr 20, 2020, 3:31 PM IST

பேஸ்புக் நிறுவனம் புதிய கேமிங் செயலியை நிறுவ திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் பயனர்கள் இணைய விளையாட்டை நேரலையாக விளையாடவும், பார்க்கவும் முடியும் என்று கூறியுள்ளது. முதலில் ஆண்ட்ராய்டு இயங்குதள பயனர்களுக்கு மட்டும் இந்த வசதி கிடைக்கும் என்று நிறுவன தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இதன் ஐ-ஓஎஸ் (iOS) பதிப்பும் விரைவில் நிறுவி வெளியிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் ஆப்பிள் நிறுவனம் தற்போது, தனது சொந்த தயாரிப்பான மேகக் கணினி மூலம் விளையாடும் அமைப்பை விரிவுபடுத்திவரும் நிலையில், ஃபேஸ்புக் கேமிங் செயலிக்கு அனுமதியளித்தால் மட்டுமே ஐ-ஓஎஸ் பயனர்களுக்கும் இந்தச் செயலி கிடைக்கப்பெறும் என்று கூறப்படுகிறது.

ஃபேஸ்புக் கேமிங் செயலியில் விளம்பரங்கள் இருக்காது என்றும், இந்தச் செயலியை 18 மாதங்களாக லத்தீன் அமெரிக்க, தென்கிழக்கு ஆசிய நாடுகளில் சோதனை முயற்சி மேற்கொண்டுவந்ததாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details