இந்தியாவில் கைப்பேசி பயனர்கள் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்த வண்ணம் உள்ளனர். இதற்கு அடுத்தபடியாக இணையம் இல்லாமல் கைப்பேசி பயன்படுத்துவோரின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துவருகிறது. 100 எம்.பி. (MB) என்னும் குறைந்த பயன்பாட்டைக் கொண்டிருந்த மக்களின் இணையப் பயன்பாடு, தற்போது மாறி பல ஜி.பி.க்களை தொட்டிருக்கிறது.
‘2024இல் இந்திய கைப்பேசி பயனர்களின் இணைய பயன்பாடு அதிகரிக்கும்’ - எரிக்சன் மொபைல்டி
டெல்லி: கைப்பேசி பயனர்கள் ஒவ்வொருவரின் இணைய பயன்பாடு 11 விழுக்காடு அதிகரித்து, 2024ஆம் ஆண்டிற்குள் 18 ஜிபி என்ற அளவை எட்டும் என எரிக்சன் மொபைல்டி நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
எரிக்சன் தகவல்
இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கும் எரிக்சன் மொபைல்டி நிறுவனம், 2024ஆம் ஆண்டிற்குள் 11 விழுக்காடு அதிகரித்து, 18 ஜி.பி. எனும் அளவை எட்டும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது. இதற்கு முக்கியக் காரணமாகக் காணொலிகள் அதிகளவில் பயனர்கள் பார்ப்பதுதான் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், ஐந்தாம் தலைமுறை அலைக்கற்றை தொழில்நுட்பம் மேம்படுத்தப்படும்போது இந்த வளர்ச்சியானது எளிதில் எட்டப்பட்டுவிடும் என இந்நிறுவனம் குறிப்பிட்டிருக்கிறது.