சான் பிராசிஸ்கோ: ஆப்பிள் இன்க் மற்றும் ஆல்பாபெட் இன்க் கூகுள் இணைந்து உருவாக்கும் புதிய தொடர்பு தடமறிதல் தொழில்நுட்பத்தை கரோனா தொற்று பரவலை குறைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கோவிட்-19: ஆப்பிள்- கூகுள் நோயாளிகளை கட்டுப்படுத்தும் புதிய தொழில்நுட்பத்தை வெளியிட்டது!
எக்ஸ்போஷர் நோட்டிஃபிகேஷன் சிஸ்டம் அல்லது நோய்த் தொற்று உள்ளவர்களிடத்தில் தொடர்புடையவர்களை கண்காணிக்கும் தொழில்நுட்பத்தை கூகுள், ஆப்பிள் ஆகிய இரு நிறுவனங்கள் இணைந்து வடிவமைத்து வெளியிட்டுள்ளன. இது செயலியாக செயல்படாமல், இயங்குதளத்தில் ஒன்றி, சுகாதார அமைப்புகளின் தரவுகளுக்கு ஏற்றவாறு இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதனை 22 நாடுகளில் செயல்படுத்த நிறுவனங்கள் முடிவு செய்துள்ளது. இது ஐஒஎஸ், ஆண்ட்ராய்டு இயங்குதளங்களின் சுகாதார செயலிகளுக்கு உள்ளீடாக (ஏபிஐ) அளிக்கப்படும் என்றும், இது ஒரு தனி செயலி கிடையாது எனவும் நிறுவனங்கள் தெளிவுபடுத்தியுள்ளது.
இதன்மூலம், கரோனா நோய்க் கிருமித் தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களிடம், தொடர்புகொண்டவர்களை கண்காணித்து அவர்களுக்கு குறுந்தகவல் அனுப்பப்படும். இதன் காரணமாக நோயின் பரவலைத் தடுக்க முடியும் என்று டெக் நிறுவனங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.