ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களுக்கு உலகெங்கும் ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். அதன் கட்டமைப்பு புதிய தொழில்நுட்பங்களும் மற்ற ஸ்மார்ட்போன்களிடமிருந்து ஐபோன்களை தனித்துக்காட்டுகிறது. இருப்பினும் ஐபோன்களின் அதிக விலை காரணமாகப் பலரும் இதை வாங்கத் தயக்கம் காட்டுவார்கள்.
இந்நிலையில் பல மாதங்களாக எதிர்பார்க்கப்பட்ட ஐபோன் எஸ்.சி.(2020) என்ற புதிய மாடல் ஸ்மார்ட்போனை ஆப்பிள் நிறுவனம் கடந்த புதன்கிழமை வெளியிட்டுள்ளது. தற்போது விற்பனையாகிவரும் ஐபோன்களில் இந்த ஐபோன் மாடலின் விலைதான் குறைவானது.
இந்த ஐபோன் எஸ்.சி மாடலின் தோற்றம் 2017ஆம் ஆண்டு வெளியான ஐபோன் 8 மாடலைப் போல வடிவமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த ஐபோனில் புதிய ஐபோன் 11 மாடலிலுள்ள பிராசஸர் பயன்படுத்தப்பட்டுள்ளது இதன் சிறப்பு. மேலும், ஐபோன் ரசிகர்களுக்குப் பிடித்த டச் ஐடி ஃபிங்கர்பிரிண்ட் சென்சாரும் இதில் உள்ளது.
iPhone SE (2020) சிறப்பம்சங்கள்
- 4.7 6.55 இன்ச் டிஸ்ப்ளே
- புதிய A13 பயோனிக் சிப்
- பின்புறம் 12 மெகாபிக்சல் கேமரா
- முன்புறம் 7 மெகாபிக்சல் கேமரா
- ஐஓஎஸ் இயங்குதளம்
- நிறங்கள் - கருப்பு, வெள்ளை, சிவப்பு