தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / lifestyle

ஒஎல்இடி டிஸ்பிளேவுடன் வரும் ஆப்பிள் 'ஐபாட் ஏர்' சாதனம் - ஒஎல்இடி டிஸ்பிளே ஐபாட் ஏர்

வாஷிங்டன்: ஆப்பிள் நிறுவனம் வரும் 2022இல் ஒஎல்இடி டிஸ்பிளே வசதிகொண்ட 'ஐபாட் ஏர்' சாதனத்தை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

apple
ஆப்பிள்

By

Published : Mar 20, 2021, 4:11 PM IST

உலகப் புகழ்பெற்ற ஆப்பிள் நிறுவனம் வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காக அவ்வப்போது புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்திவருகிறது. ஆப்பிள் சாதனங்களின் விலை சற்று அதிகமாக இருக்கும் என்றாலும், அதனை வாங்கிட பெரிய கூட்டமே உள்ளது.

பலருக்கு ஆப்பிள் தயாரிப்புகள் உபயோகிப்பது கனவாகவேதான் இருந்துவருகிறது. இந்நிலையில், வரும் 2022ஆம் ஆண்டில் ஒஎல்இடி டிஸ்பிளே வசதிகொண்ட 'ஐபாட் ஏர்' சாதனத்தை அறிமுகப்படுத்த ஆப்பிள் நிறுவனம் முடிவுசெய்துள்ளது.

ஆப்பிள் நிறுவனம் அதன் தயாரிப்புகளான ஆப்பிள் வாட்ச், ஐபோன்களில் ஒஎல்இடி டிஸ்பிளேதான் உபயோகித்துவருகிறது. ஆனால், ஐபாட், மேக் சாதனங்களில் பழைய எல்இடி டிஸ்பிளேதான் பயன்படுத்துகிறது.

தற்போது, ஒஎல்இடி டிஸ்பிளே உபயோகிக்கும் ஆசை பயனாளர்களிடையே ஏற்பட்டுள்ளதால், அனைத்துச் சாதனங்களிலும் அதனை அமல்படுத்தும் பணியில் அந்நிறுவனத்தின் தொழில்நுட்பப் பிரிவு களமிறங்கியுள்ளது. அந்த வரிசையில், 12.9 இன்ச் ஐபாட் ப்ரோ, 16 இன்ச் மேப் புக் ப்ரோ சாதனங்கள் இடம்பெறுள்ளன.

இதுமட்டுமின்றி, இந்தாண்டின் பிற்பகுதியில் 8.7 இன்ச் டிஸ்பிளே கொண்ட ஐபாட் மினி ப்ரோ சாதனத்தை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இச்சாதனம் 2019இல் வெளியான ஐபாட் மினி சாதனத்தைவிட மேம்பட்ட வசதி கொண்டது எனக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க:வெளியான 'மைக்ரோமாக்ஸ் இன் 1' ஸ்மார்ட்போன்: சிறப்பம்சங்கள் என்னென்ன?

ABOUT THE AUTHOR

...view details