ஆப்பிள் அதன் முக்கிய சேவைகளை ஆப் ஸ்டோர், ஐ-க்ளவுட், ஆப்பிள் போட்காஸ்ட்கள் மற்றும் அதன் சந்தா அடிப்படையிலான கேமிங் சேவையான ஆர்கேட் உள்ளிட்டவற்றை 20 புதிய நாடுகளில் விரிவுப்படுத்தியுள்ளது. மேலும், ஆப்பிள் மியூசிக் சேவையை 52 புதிய நாடுகளில், ஆறு மாத காலம் இலவசமாக சோதனை முயற்சியில் வழங்கவுள்ளது.
ஆப் ஸ்டோர், மியூசிக், ஆர்கேட் ஆகியவற்றை புதிய சந்தைகளுக்கு விரிவுபடுத்தியது ஆப்பிள்! - latest tech news in tamil
ஆப்பிள் தனது முக்கிய சேவைகளான ஆப் ஸ்டோர், ஐ-க்ளவுட், ஆப்பிள் போட்காஸ்ட்கள் போன்றவற்றை 20 புதிய நாடுகளில் தொடங்கியதுடன், ஆப்பிள் மியூசிக் சேவையை 52 புதிய நாடுகளில், ஆறு மாத காலம் இலவசமாக சோதனை முயற்சியில் வழங்கவுள்ளது.
apple app store
ஆப் ஸ்டோர் டெவலப்பர்களுக்கு தக்க தளத்தை உருவாக்க பல ஆப்பிள் நிறுவனம் பல வழிகளை மேற்கொண்டுள்ளது. 2008ஆம் தொடங்கப்பட்டதிலிருந்து, டெவலப்பர்கள் கலாசாரத்தை விளக்கும், வாழ்க்கையை மாற்றும் புதுமையான பயன்பாடுகளை உருவாக்கி வருகின்றனர்.
ரூ.76 ஆயிரத்தில் மோட்டோரோலா மொபைல் - சிறப்புகள் என்னென்ன?
- ஆப்பிள் ஆர்கேட் மொத்தமாக தங்களிடமுள்ள 100 பிரத்யேக விளையாட்டுகளை, ஐபோன், ஐபேட், ஐபோட், ஐமேக், ஆப்பிள் டிவி என அனைத்திலும் விளையாட அனுமதிக்கிறது.
- ஒவ்வொரு மாதமும் புதுமையான புதிய விளையாட்டுகளை ஆப்பிள் ஆர்கேட் பதிவேற்றம் செய்கிறது.
- ஆப்பிள் மியூசிக்கை பொறுத்தவரை, தற்போது 167 நாடுகளின், 60 மில்லியன் பாடல்களை உள்ளடக்கி உலா வருகிறது.
- புதிதாக 52 நாடுகளில் ஆப்பிள் மியூசிக் விரிவுப்படுத்தப்பட்டு, 6 மாத காலம், சோதனை முயற்சிக்காக இலவசமாக சேவை வழங்கப்படும்
- ஆப்பிள் போட்காஸ்ட்கள் மூலம் உலகம் முழுவதிலுமுள்ள 175 நாடுகளிலிருந்து, ஒரு மில்லியன் நிகழ்ச்சிகளை, 100 மொழிகளில் கேட்டு ரசிக்கலாம்