தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / lifestyle

ஜியோபோன் நெக்ஸ்ட் 4ஜி: மலிவான விலையில் அசரடிக்கும் அம்சங்கள்!

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 44ஆவது வருடாந்திர கூட்டத்தில், கூகுள் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கப்பட்ட புதிய ஜியோபோன் நெக்ஸ்ட் 4ஜி ஸ்மார்ட்போனை முகேஷ் அம்பானி இன்று அறிமுகப்படுத்தினார்.

ஜியோபோன் நெக்ஸ்ட் 4ஜி, மலிவான விலையில் அசரடிக்கும் அம்சங்கள், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஜியோ நிறுவனம்
ஜியோபோன் நெக்ஸ்ட் 4ஜி

By

Published : Jun 24, 2021, 8:42 PM IST

மும்பை:கைபேசி பயனர்களின் பெரும் எதிர்பார்ப்பினை நிவர்த்தி செய்யும் விதமாக ஜியோ நிறுவனம் தனது புதிய குறைந்த விலை 4ஜி ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது.

முன்னதாக ஜியோ நிறுவனம் வெளியிட்ட 4ஜி ஃபீச்சர் போன், டெக் சந்தையில் சக்கைபோடு போட்டது. அதனைத் தொடர்ந்து புதிய ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என அந்நிறுவனம் தெரிவித்திருந்தது.

இச்சூழலில், ஜியோ நிறுவனத்தில், கூகுள் நிறுவனம் பெருமளவு முதலீடு செய்தது. இதனைக் கொண்டு ஜியோ - கூகுள் இணைந்து மலிவு விலையில் அதிக சிறப்பம்சங்களைக் கொண்ட ஸ்மார்ட்போன்களை வெளியிடும் என்று அறிவிக்கப்பட்டது.

அந்த வகையில் இன்று (ஜூன்24) நடைபெற்ற ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 44ஆவது வருடாந்திர கூட்டத்தில், அதன் தலைவர் முகேஷ் அம்பானி புதிய 4ஜி ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தினார். அதற்கு "ஜியோபோன் நெக்ஸ்ட் 4ஜி" என்று பெயரிடப்பட்டுள்ளது.

பயனர்களுக்கு அதிகம் தேவைப்படும் அம்சங்களான கூகுள் ப்ளே ஸ்டோர், ஜியோ செயலிகள், செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் கொண்ட படக்கருவிகளைக் கொண்டு டெக் சந்தையில் இந்த ஸ்மார்ட்போன் வரும் விநாயகர் சதூர்த்தி அன்று கால் பதிக்க உள்ளது.

ஜியோபோன் நெக்ஸ்ட் 4ஜி ஸ்மார்ட்போன் 6,000 ரூபாய்க்குள் சந்தைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details