சைபர் பாதுகாப்பை ஆராயும் நிறுவனமான ஜிகாப்ஸ் (ZecOps) இரண்டு ஆப்பிள் மின்னஞ்சல் பெட்டிகளிலுள்ள வைரஸுகளை கண்டறிந்துள்ளது. ஆப்பிள் நிறுவன தகவல் சாதனங்களுடன் வரும் மின்னஞ்சல் பெட்டியில் தான் இந்த வைரஸ் தொற்ற வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இது ஆப்பிள் நிறுவனத்தின் புதிய பதிப்புகளான இ-ஓஎஸ்13ன்றையும் (iOS 13) தாக்கவல்லது என எச்சரித்துள்ளனர்.
இதனால் ஹாக்கர்கள் மின்னஞ்சல்களை மாற்றியமைக்கவோ, நீக்கவோ, பொது வெளியில் உலாவ விடவோ முடியும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், சில தருணங்களில் பயனர்களின் ஐபோன், ஐபேட் ஆகியவற்றின் தகவல் சாதனங்களை முழுவதுமாக ஹாக்கர்களால் கையாள முடியும் என்று கூறியுள்ளது.