கைப்பேசி துறையில் ஆதிக்கம் செலுத்தும் சீன நிறுவனங்கள், பல்வேறு வித்தியாசமான படைப்புகளுடன் வாடிக்கையாளர்களைத் தன் பக்கமே வைத்துள்ளன.
குறிப்பாக ரெட்மி, சியோமி, ரியல்மி போன்ற நிறுவனங்கள் குறைந்த விலையில் அதீத தொழில் நுட்ப வசதியுடன் கூடிய ஸ்மார்ட் டிவிகளை அறிமுகப்படுத்தின. இருப்பினும், டிவி துறையில் முன்பிலிருந்தே ஜாம்பவானாகத் திகழும் சோனி நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.
விலை சற்று அதிகமாக இருந்தாலும், தயாரிப்புகள் தரம் சிறந்ததாக இருக்கும் என்பதே மக்களின் கருத்து.
அந்த வகையில், சோனி நிறுவனம் தனது அடுத்தப் படைப்பாக 4k அல்ட்ரா ஹெச்டி, எல்இடி டிஸ்பிளே திறன் கொண்ட புதிய பிராவியா X8000H,X7500H ஸ்மார்ட் டிவி சீரிஸ்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட் டிவியை வாடிக்கையாளர்கள் பார்க்கும் போது புதிய அனுபவம் கிடைப்பதற்காக TRILUMINOS டிஸ்பிளே வசதியைப் பொருத்தியுள்ளனர். இதுமட்டுமின்றி தரமான ஆடியோ வசதிக்காக x-balanced ஸ்பீக்கரும், இணையத்தில் எளிதாக தேடுவதற்கு கூகுள் அசிஸ்டன்ட் வசதியும் இணைத்துள்ளனர்.
BRAVIA சீரிஸில் 85X8000H ஸ்மார்ட் டிவியின் விலை 5 லட்சத்து 99 ஆயிரத்து 990 ரூபாய்க்கும், 65X8000H ஸ்மார்ட் டிவியின் விலை 1 லட்சத்து 39 ஆயிரத்து 990 ரூபாய்க்கும், 55X7500H ஸ்மார்ட் டிவியின் விலை 79 ஆயிரத்து 990 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்தப் புதிய படைப்புகள் அனைத்தும் சோனி மையங்களிலும், முக்கியமான எல்க்ட்ரானிக் கடைகளிலும், ஆன்லைன் தளங்களிலும் விற்பனைக்கு வரும் எனத் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி Q4 காலாண்டில் 1.2% ஆக காணப்படுகிறது: எஸ்பிஐ