தமிழ்நாடு

tamil nadu

இது டிவியா இல்ல... உங்களை பிரம்மிப்பில் ஆழ்த்தும் சாம்சங் 'தி ஃபிரேம் டிவி'

By

Published : Jun 10, 2021, 7:35 PM IST

Updated : Jun 10, 2021, 9:25 PM IST

கியூ எல்இடி திரையுடன் வரும் சாம்சங் நிறுவனத்தின் 'தி ஃபிரேம் டிவி'இன் 2021ஆம் ஆண்டின் பதிப்பு வெளியாகியுள்ளது. இதில், திரையின் சட்டகங்களை (பெசல்ஸ்) பயனர்களின் விருப்பத்திற்கேற்ப மாற்றிக் கொள்ளும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.

Samsung, The Frame TV, The Frame TV in India, QLED technology, Samsung tv, latest edition of The Frame TV, AI based auto curation technology, The Frame TV 2021, latest tech news, Samsung India, SpaceFit, சாம்சங் டிவி, சாம்சங் க்யூ லெட் டிவி, சாம்சங் ஃப்ரேம் டிவி, சாம்சங் செய்திகள், டெக் செய்திகள், tech news in tamil, latest tech tamil, latest technology tamil, ஒன் கனெக்ட் பாக்ஸ், சாம்சங் கியூ எல்இடி டிவி
தி ஃபிரேம் டிவி

டெல்லி: கொரிய நிறுவனம் சாம்சங், தனது 'தி ஃபிரேம் டிவி'இன் புதிய பதிப்பை இந்தியாவில் ரூ.61,990 என்ற தொடக்க விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

அமேசான், பிளிப்கார்ட், சாம்சங் இந்தியா ஆகிய தளங்களில் இதனை பதிவுசெய்து பெற்றுக் கொள்ளலாம். ஜூன் 12ஆம் தேதி முதல் சந்தைக்கு வரும் தி ஃப்ரேம் டிவி, 43” அங்குலம், 50” அங்குலம், 55” அங்குலம், 65” அங்குலம் ஆகிய அளவுகளில் கிடைக்கும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது.

இதே ரகத்தின் 2020 பதிப்பை விட 46% விழுக்காடு மெலிதாக 2021ஆம் ஆண்டின் பதிப்பு இருக்கும் என்று கூறப்படுகிறது. 4கே காட்சி தரம், தெளிவான ஒலியமைப்பு என அசத்தும் இந்த டிவியின் முக்கிய அம்சமாக பார்க்கப்படுவது, பயனர்களுக்கு பிடித்த வகையில் சட்டகங்களை மாற்றுவது தான்.

சாம்சங் தி ஃபிரேம் டிவி சிறப்பம்சங்கள்

  • அனைத்து மாடல்களிலும் 4 கே கியூ எல்இடி திரை
  • சாம்சங்கின் குவாண்டம் 4 கே ஏஐ ப்ராசஸர் / இது அனைத்து காட்சிகளையும் 4கே தரத்திற்கு உயர்த்தும்
  • ஒளி உணரிகள் (ஆம்பியண்ட் லைட் சென்சார்)
  • நகர்வு உணரிகள் (மோஷன் சென்சார்) வழியாக டிவி அருகில் யாரும் இல்லாதபோது பேனலை மங்கச் செய்யும் அம்சம்
  • இதன் ஒன் கனெக்ட் பாக்ஸ் (One Connect box) கேபிள் மேனேஜ்மேன்ட்டை முழுவதுமாக எளிதாக்குகிறது
  • ஏர்ப்ளே 2.0 செயலி அனுமதி / இது ஐபோன் பயனர்களை டிவியுடன் இணைப்பில் இருக்க உதவுகிறது
  • சாம்சங் சூரிய மின்சக்தி ரிமோட் / இது வழக்கமான பேட்டரிகளின் பயன்பாட்டை நீக்கி, சுற்றுப்புற ஒளியுடன் தன்னை ரீசார்ஜ் செய்து கொள்ளும்
  • டிவியின் சட்டகங்களை விருப்பத்திற்கேற்ப மாற்றிக் கொள்ளும் வசதி
  • 'ஆர்ட் மோட்' மூலம் டிவியை சுவற்றில் இருக்கும் புகைப்பட சட்டம் போல் மாற்றியமைக்கலாம் / திரையில் அதற்கேற்ற படங்களை மாற்றும் வசதியும் உள்ளது
  • விலை: ரூ.61,990 முதல் தொடங்குகிறது
Last Updated : Jun 10, 2021, 9:25 PM IST

ABOUT THE AUTHOR

...view details