தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / lifestyle

சாம்சங் அறிமுகப்படுத்திய பிரமாண்ட டிவி! - 110 இன்ச் மைக்ரோ எல்ஈடி டிவி

சியோல்: சாம்சங் நிறுவனத்தின் அடுத்த கண்டுபிடிப்பாக 110 இஞ்ச் மைக்ரோ எல்ஈடி டிவியை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

மைக்ரோ எல்ஈடி டிவி
மைக்ரோ எல்ஈடி டிவி

By

Published : Dec 10, 2020, 1:10 PM IST

ஸ்மார்ட் டிவி துறையில் ஆதிக்கம் செலுத்தும் சாம்சங் நிறுவனத்தின் 110 இஞ்ச் மைக்ரோ எல்இடி டிவி (110-inch Micro LED TV) விரைவில் அறிமுகமாகவுள்ளது. இந்த டிவியின் விற்பனை விலையாக ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 400 ரூபாய் நிர்ணயம் செய்துள்ளனர்.

இம்மாத இறுதியில் பிரமாண்ட டிவியின் முன்பதிவு தொடங்கும் என்றும், அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் விற்பனைக்கு வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. முதற்கட்டமாக, அமெரிக்கா, மத்திய கிழக்கு, சில ஐரோப்பியா நாடுகளில் டிவியை அறிமுகப்படுத்தவுள்ளனர். உலகளாவிய விற்பனைக்கும் தயாராக்கிவருகின்றனர்.

இந்தப் புதிய பிரமாண்ட டிவியில் மைக்ரோமீட்டர் அளவிலான எல்.ஈ.டி. சிப்கள் ஒற்றை பிக்சல்களாகப் பயன்படுத்துகின்றன, அவை சிறந்த தெளிவுத்திறனையும், கிளாரிட்டி படங்களையும் வழங்குகிறது.

110 இஞ்ச் மைக்ரோ எல்இடி டிவி

மேலும், இந்த 110 இஞ்ச் மைக்ரோ எல்இடி டிவியில் 8 மில்லியனுக்கும் அதிகமான ஆர்ஜிபி எல்இடி சிப்கள் உள்ளன. இது 4k பிக்சர் தரத்தைப் கொண்டுள்ளது. இந்தத் தயாரிப்பு மைக்ரோ AI பிராசஸர் கொண்டுள்ளது.

இந்த டிவியை மேல் நடுத்தர வர்க்கம் மக்களிடையே கொண்டுசெல்ல பலவிதமான மார்க்கெட்டிங் முயற்சிகள் மேற்கொள்கின்றனர். மைக்ரோ எல்இடி டிவி சந்தையில் அதிக பிராண்டுகள் பங்கேற்கும்பட்சத்தில் டிவியின் விலை குறைய வாய்ப்புள்ளது.

எதிர்காலத்தில் 70 இஞ்ச் முதல் 100 இஞ்ச் வரையிலான டிஸ்பிளே கொண்ட மைக்ரோ எல்இடி டிவிகளை வெளியிடுவதற்கான ஆலோசனைகள் நடைபெற்றுவருகின்றன என சாம்சங் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details