டெல்லி: சோனி நிறுவனத்தின் புதிய பிரேவியா X90J ஸ்மார்ட் டிவி காக்னிட்டிவ் பிராசஸரை கொண்டிருக்கிறது.
இந்த டிவியில் ஃபுல் அரே பேக்லைட்டிங் மற்றும் லோக்கல் டிம்மிங் உள்ளது. இதில் உள்ள 4K பேனல் எச்டிஆர்10, டால்பி விஷன் மற்றும் HLG உள்ளிட்ட அம்சங்களை வழங்குகிறது. இந்த டிவியில் மொத்தம் நான்கு எச்டிஎம்ஐ போர்ட்கள் உள்ளன.
மேலும், இதில் மினி-ஏவி போக்ட், இரண்டு யுஎஸ்பி போர்ட்கள், ஹெட்போன் அவுட், ஆப்டிக்கல் அவுட், வைபை மற்றும் ப்ளூடூத் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.