தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / lifestyle

வீடியோ கேம் டெவலப்பர் பங்கியை வாங்கிய சோனி பிளேஸ்டேஷன் - மைக்ரோசாப்ட்

பிளேஸ்டேஷன் தயாரிப்பாளரான சோனி, எக்ஸ்பாக்ஸின் ஹிட் கேம்களில் வீடியோ கேம் ஸ்டுடியோவை வாங்கியதன் மூலம் எக்ஸ்பாக்ஸ் தயாரிப்பாளரான மைக்ரோசாஃப்ட் உடனான போட்டியை அதிகரித்துவருகிறது.

Sony's PlayStation buys Bungie, game studio with Xbox ties
சோனி ப்ளேஸ்டேஷன்

By

Published : Feb 2, 2022, 1:37 PM IST

வாஷிங்டன்: 3.6 பில்லியன் டாலர் செலவழித்து வாஷிங்டனில் உள்ள பெல்லூவை தளமாகக் கொண்ட வீடியோ கேம் டெவலப்பர் பங்கியை (Bungie Inc) தாம் வாங்கியதாக ஜனவரி 31ஆம் தேதி சோனி இன்ட்ராக்டிவ் என்டர்டெயின்மென்ட்அறிவித்தது. பிரபலமான கேம் சீரிஸ் டெஸ்டினியை பங்கி உருவாக்கியுள்ளது. இது எக்ஸ்பாக்ஸ் தயாரிப்பாளரான மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் முக்கிய கேம் ஆகும்.

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் 2000ஆம் ஆண்டில் பங்கியை வாங்கியது, ஆனால் பின்னர் 2007ஆம் ஆண்டில் கேம் ஸ்டுடியோவை ஹாலோ உரிமைக்கான அறிவுசார் சொத்துரிமையைத் தக்கவைத்துக்கொண்டது. சோனி உலகின் மிகப்பெரிய வீடியோ கேம் நிறுவனங்களில் ஒன்றாகும், ஆனால் மைக்ரோசாஃப்ட் அதன் கேமிங் வளர்ச்சியை தற்போதுதான் பெருக்கிவருகிறது.

சமீபத்தில் 68.7 பில்லியன் டாலருக்கு உயர்தர கேம் வெளியீட்டாளரான Activision Blizzard - ஐ வாங்குவதற்கான திட்டங்களை அறிவித்தது. கால் ஆஃப் டூட்டி, கேண்டி க்ரஷ் போன்ற கேம்களின் உரிமைகளை வாங்குவதை குறிக்கோளாக வைத்துள்ளது.

ஜப்பானின் சோனி, சீன தொழில்நுட்ப நிறுவனமான டென்சென்ட்டுக்குப் அடுத்து, உலக விற்பனையில் மூன்றாவது பெரிய கேமிங் நிறுவனமாக நிண்டெண்டோவை விட மைக்ரோசாஃப்ட் முன்னிலைக்கு வர முயற்சி செய்கிறது.

இது குறித்து கடந்த ஆண்டு எக்ஸ்பாக்ஸின் உயர் அலுவலர் பில் ஸ்பென்சர் செய்தியாளரிடம், பங்கியை கொடுத்ததிலிருந்து நாங்கள் நிறைய கற்றுக்கொண்டோம் என்று கூறினார். இந்நிலையில் ஜனவரி 31ஆம் தேதியன்று ஸ்பென்சர், தனது கேம் ஸ்டுடியோக்களில் 'திறமையான குழுவைச் சேர்த்ததற்காக' பிளேஸ்டேஷனுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து ட்வீட் செய்தார்.

இதையும் படிங்க: நிலவில் விழப்போகும் எலன் மாஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் - ஆராயக் காத்திருக்கும் நாசா

ABOUT THE AUTHOR

...view details