நாம் நண்பர்களுடன் இணைந்து கபடி, கிரிக்கெட் என விளையாடிய காலம் மலையேறிவிட்டது. தற்போதைய, 2k கிட்ஸ் ஆன்லைன் கேம்ஸ் விளையாடுவதில்தான் அதிகளவில் ஆர்வம் காட்டுகின்றனர். மடிக்கணினி, கணினி, பிளே ஸ்டேஷன் எனப் பல்வேறு சாதனங்களில் கேம்ஸ் விளையாடினாலும், வெளியூர் செல்லும் சமயத்தில் கேம்ஸ் விளையாட முடியாதது குறையாகத்தான் இருந்துவந்தது.
அவர்களுக்காகவே, அறிமுகமானதுதான் வீடியோ கேம் கன்சோல். குறிப்பாக, இந்தச் சந்தையில் நிண்டெண்டோ சுவிட்ச் கேமிங் கன்சோல் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதில் அதிகளவிலான கேம்ஸ்களை விளையாட முடியும். பொதுமுடக்கம் சமயத்தில் பெரும்பாலான இளைஞர்கள், தங்களது நேரத்தை நிண்டெண்டோ சுவிட்ச் கன்சோலில் விளையாடுவதில்தான் செலவிட்டனர்.
இந்நிலையில், நிண்டெண்டோ சுவிட்சுக்கு சரியான மாற்று சாதனத்தை குவால்காம் நிறுவனம் தயாரித்துவருகிறது. அதிலும், நிண்டெண்டோ போலவே ஜாய்ஸ்டீக் வசதி இடம்பெறவுள்ளது.