டெல்லி: பப்ஜி நியூ ஸ்டேட் இந்தியா உள்பட 200 நாடுகளில் நவம்பர் 11ஆம் தேதி அறிமுகமாகிறது. இதனை அந்நிறுவனத்தின் வெளியீட்டாளர் கிராஃப்டன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இதன் சோதனை நிகழ்ச்சி 28 நாடுகளில் அக். 29-30 வரை நடத்தப்படும். இதைத்தொடர்ந்து புதிய மொபைல் கேம் ஆண்ட்ராய்டு மற்றும் iOS இல் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் வெளியிடப்படும் என்று தென்கொரிய நிறுவனம் தெரிவித்துள்ளது.
பிப்ரவரியில் அறிவிக்கப்பட்ட பப்ஜி Android மற்றும் iOS இல் 50 மில்லியனுக்கும் அதிகமான முன் பதிவுகளைப் பெற்றதாகக் கூறப்படுகிறது. இது குறித்து கிராஃப்டன், “யூடியூபில் லைவ் ஸ்ட்ரீம் செய்யப்பட்ட அதன் நிகழ்வில் பப்ஜி நியூ ஸ்டேட் உலகளவில் 17 வெவ்வேறு மொழிகளில் இலவசமாக விளையாடக்கூடிய மொபைல் கேமாக அறிமுகமாகும்” என்றார்.