நிண்டெண்டோ சுவிட்ச் கேமிங் கன்சோல் என்பது ஸ்மார்ட்போனுடன் இணைத்து கேம்ஸ் விளையாடும் சாதனம் ஆகும். லாக்டவுன் சமயத்தில் பெரும்பாலான இளைஞர்கள், தங்களது நேரத்தை நிண்டெண்டோ சுவிட்ச் விளையாடுவதில் செலவிட்டார். இதைக் கருத்தில் கொண்டு, வாடிக்கையாளர்களை கவர்வதற்காக புதிய அப்டேட்களை வழங்கி வந்தனர்.
அதன்படி, தற்போது வெளியிட்டுள்ள அப்டேட் அடிப்படையில், கேமிங் கன்சோலில் இருந்து ஸ்மார்ட்போனுக்கு புகைப்படங்களையும் வீடியோக்களையும் வயர்லெஸ் முறையில் மாற்ற பயனர்களை அனுமதிக்கிறது. அதே போல், ஸ்கிரீன் ஷாட்களையும் வீடியோக்களையும் ஸ்மார்ட் சாதனங்களுக்கு அல்லது யூ.எஸ்.பி மூலம் பிசிக்கு மாற்றும் திறனும் உள்ளது. மேலும், கூடுதலாக, பல பதிவிறக்கங்கள் செயல்பாட்டில் இருக்கும்போது எந்த பதிவிறக்கத்திற்கு முக்கியத்தவம் கொடுக்க வேண்டும் என்ற முடிவும் நாம் தேர்வு செய்ய முடிகிறது.