கேமிங் பிரியர்களுக்கு பல ஆண்டுகளாக பிளே ஸ்டேஷன் கேமிங் கன்சோல் மட்டுமே ஒரே வாய்ப்பாக இருந்தது. அப்போதுதான் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தனது எக்ஸ்பாக்ஸ் கேமிங் கன்சோலை வெளியிட்டது.
எக்ஸ்பாக்ஸுக்கு சர்வதேச அளவில் வரவேற்பு தொடர்ந்து அதிகரித்தால் அதைத்தொடர்ந்து எக்ஸ்பாக்ஸ் 360, எக்ஸ்பாக்ஸ் 1, எக்ஸ்பாக்ஸ் 1 எஸ், எக்ஸ்பாக்ஸ் 1 எக்ஸ் ஆகிய கேமிங் கன்சோல்களையும் மைக்ரோசாஃப்ட் வெளியிட்டது.
இந்நிலையில், எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் எக்ஸ் என்ற புதிய கேமிங் கன்சோலை இந்தாண்டு வெளியிடவுள்ளதாக அறிவித்திருந்தது. இருப்பினும் கோவிட்-19 பரவல் காரணமாக தொழில்துறை முற்றிலும் முடங்கியுள்ளதால் எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் எக்ஸின் வெளியீட்டுத் தேதி இந்தாண்டு இறுதிக்குத் தள்ளிப்போகலாம் என்ற தகவல் பரவியது.
அதன்படி எக்ஸ்பாக்ஸ் கனடா தனது ட்விட்டர் பக்கத்தில் எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் எக்ஸ் கேமிங் கன்சோல் மே 7ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்துள்ளது. இது முந்தைய கேமிங் கன்சோல்களைவிட வீடியோ மற்றும் கேம்களின் தரம், லோடிங் ஸ்பீட் ஆகியவற்றில் மேம்பட்டதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: இந்தியர்களின் தகவல்களைத் திருடுகிறதா சியோமி?