டெல்லி: விளையாட்டு பிரியர்களுக்கு இனிப்பான செய்தியாக, எக்ஸ் பாக்ஸ் விளையாட்டுகளை டிவிக்களில் நிறுவ மைக்ரோசாப்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இந்த முடிவின் படி, எக்ஸ் பாக்ஸ் விளையாட்டு கருவிகள் வாங்க இயலாத மக்கள், டிவி, கணினி மூலம் வெறும் ஜாய்ஸ்டிக் மட்டும் கொண்டு விளையாட முடியும். இதற்கான மேகக் கணினி புதுபித்தல் முறை குறத்து மைக்ரோசாப்ட் நிறுவனம் செயலாற்றிவருகிறது.
அதுமட்டுமில்லாமல், டிவி நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கிறது. டிவி மற்றும் கணினிகளில் மென்பொருளை நிறுவுவதன் மூலம், இணைய வசதி கொண்டு மேகக் கணினியில் உள்ள விளையாட்டுகளை ஸ்ட்ரீமிங் செய்ய முடியும்.