தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / lifestyle

ஐஓஎஸ், கணினி தளங்களுக்கு ஹாய் சொல்லும் மைக்ரோசாப்ட் எக்ஸ்-பாக்ஸ் - microsoft

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மேகக் கணினி தொழில்நுட்பத்தில் இயங்கும் எக்ஸ் பாக்ஸ் விளையாட்டு தளத்தினை ஐஓஎஸ், கணினி தளங்களுக்கு விரிவுப்படுத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதனை 2021ஆம் ஆண்டு முதல் செயல்படுத்த மைக்ரோசாப்ட் நிறுவனம் முனைப்புக் காட்டிவருகிறது.

Xbox Game Pass Ultimate
Xbox Game Pass Ultimate

By

Published : Dec 11, 2020, 12:33 AM IST

டெல்லி: 2021ஆம் ஆண்டில் ஐஓஎஸ், கணினி தளங்களுக்கு எக்ஸ் பாக்ஸ் விளையாட்டு தளங்களை அணுகும் வசதியை மைக்ரோசாப்ட் நிறுவனம் அளிக்கவுள்ளது.இதற்கு நிறுவனம் முனைப்புக் காட்டி வருகிறது.

முன்னதாக இந்த செயலி ஸ்மார்ட் டிவி பயனர்களுக்கு அளிக்கப்படும் என்ற செய்தி உலாவியது. இச்சூழலில் இந்த தகவலை நிறுவனம் வெளியிட்டுள்ளது.

சோனி நிறுவனத்தின் ப்ளே ஸ்டேஷனுடன் நேரடி போட்டியில் உள்ளது, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் எக்ஸ் பாக்ஸ். விளையாட்டு பிரியர்களுக்கு ஏற்றவாறு நிறுவனங்கள் தங்கள் தரத்தை மெருகேற்றி சேவைகள் வழங்கிவருகிறது.

இச்சூழலில், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இந்த முடிவு, விளையாட்டு பிரியர்களுக்கு இனிப்பான செய்தியாக அமைந்திருக்கிறது.

ABOUT THE AUTHOR

...view details