உலகில் பல்வேறு நாடுகளிலும் கோவிட்-19 காரணமாக பல்வேறு விதமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். இந்தக் காலங்களில் பொதுமக்கள் அதிகமாக தங்கள் ஸ்மார்ட்போன்களிலும் கணினிகளிலும் கேம்களை விளையாடிவருகின்றனர்.
இந்த காலகட்டத்தில் மக்கள் பலரும் கேமிங் சப்ஸ்கிரிப்சன் சேவைகளைப் பயன்படுத்திவருகின்றனர். அதன்படி கூகுளின் ஸ்டேடியா கேமிங் சர்வீஸை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் தற்போது கணிசமாக அதிகரித்துள்ளது.
முன்னதாக, கூகுள் ஸ்டேடியா பயனாளர்களைக் கவரும்வகையில் பிஃபா, மேடன் என்எப்எல் கால்பந்து உள்ளிட்ட வீடியோ கேம்கள் இந்தாண்டு இறுதியில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.