தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / lifestyle

எபிக் கேம்ஸ்: பங்க்ரா பூகி கோப்பை விளையாட்டு வெளியீடு! - எபிக் கேம்ஸ்

பிரபலமான ஃபோர்ட்நைட் விளையாட்டின் டெவலப்பர் எபிக் கேம்ஸ், ஒன்-ப்ளஸுடன் இணைந்து ஆண்ட்ராய்டு கைப்பேசிகளுக்கான, இந்தியா சார்ந்த பங்க்ரா பூகி கோப்பை விளையாட்டை, டிசம்பர் 6 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

Bhangra Boogie Cup
Bhangra Boogie Cup

By

Published : Dec 5, 2020, 6:18 PM IST

டெல்லி: பிரபலமான ஃபோர்ட்நைட் விளையாட்டின் டெவலப்பர் எபிக் கேம்ஸ், ஒன்-ப்ளஸுடன் இணைந்து ஆண்ட்ராய்டு கைப்பேசிகளுக்கான பங்க்ரா பூகி கோப்பை விளையாட்டை நாளை (டிச 6) வெளியிடவுள்ளது.

போட்டியில் பங்குபெறும் வீரர்களுக்கு ஒன்பிளஸ் 8டி கைப்பேசி, ஒன்-பிளஸ் பட்ஸ் என பல பரிசுகள் வெல்ல வாய்ப்பு கிடைக்கும் என்று நிறுவனம் அதிரடியாகத் தெரிவித்துள்ளது.

எபிக் கேம்ஸ் தளத்தில் கணக்குள்ளவர்கள், இரண்டடுக்கு குறியீட்டு பாதுகாப்பு அம்சங்களைக் கடந்து உள்நுழைய வேண்டும். அதன் பிறகு விளையாட்டில் தங்களை இணைத்துக் கொள்ளலாம்.

எபிக் கேம்ஸ்

கூகுள் நிறுவனத்துடனான பல தரப்பட்ட மோதல்களைத் தொடர்ந்து எபிக் கேம்ஸ் நிறுவனம், தங்களில் பிரதானமான விளையாட்டுகளை, ஆண்ட்ராய்டு தளங்களிலிருந்து நீக்கியது.

இச்சூழலில், ஒன்-ப்ளஸ் கைப்பேசி நிறுவனத்துடன் இணைந்து இந்த விளையாட்டை அறிமுகப்படுத்துவது, கேமர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details