ஆப்பிள் ஆர்கேட் என்பது வீடியோ கேம் சந்தா சேவையாகும். இந்த கேம் சந்தா சேவையில் விளம்பரங்கள் வராது, கேம்ஸ் டவுன்லோட் செய்ய கட்டணம் கிடையாது.இதை, ஐபோன், ஐபாட், ஐபாட் டச், மேக், ஆப்பிள் டிவி ஆகிய சாதனங்களில் பயன்படுத்த முடியும். மேலும், 6 பேர் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆப்பிள் நிறுவனம், ஆர்கேட் கேமிங் சேவையில் 180க்கும் மேற்பட்ட கேம்களை விளையாடும் வகையில் ஏற்பாடு செய்துள்ளது. மேலும், ஆப் ஸ்டோர் கிரேட்ஸ், டைம்லெஸ் கிளாசிக்ஸ் என்ற இரண்டு புதிய விளையாட்டு பிரிவுகளையும் இணைத்துள்ளது. இவை ஆப்பிள் ஐபோனிலும், ஐபாட்டிலும் கிடைக்கிறது.
டைம்லெஸ் கிளாசிக்ஸ் பிரிவில், உலகளவில் பிரபலமான "செஸ் - ப்ளே & லர்ன்," மற்றும் "பேக்கமன்" போன்ற கேம்கள் இடம்பெற்றுள்ளன. அதே போல, ஆப் ஸ்டோர் கிரேட்ஸ் பிரிவில், விருது பெற்ற விளையாட்டுகளான த்ரீஸ், "மினி மெட்ரோ,ப்ரூட் நிஞ்ஜா கிளாசிக் ஆகியவை உள்ளன. மேலும், ஆர்கேட் ஒரிஜினல் பிரிவில் "NBA 2K21 ஆர்கேட் பதிப்பு, ஸ்டார் ட்ரெக்: லெஜண்ட்ஸ்,தி ஓரிகான் டிரெயில் ஆகிய கேம்ஸ்கள் உள்ளன.
இந்தச் சந்தா சேவை ஜஸ்ட் 99 ரூபாய்க்கு கிடைக்கிறது. இதை வாங்குவோர் முதல் மாதம் இலவசமாக உபயோகித்துக்கொள்ளலாம். தற்போது, புதிதாக ஆப்பிள் தயாரிப்புகளை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஆப்பிள் ஆர்கேட் சேவை மூன்று மாதங்களுக்கு இலவசமாக கிடைக்கிறது.
இதையும் படிங்க:ட்விட்டர் வாசிகளுக்கு குஷி நியூஸ்... ஃப்ளீட்டில் அறிமுகமான ஸ்டிக்கர் வசதி!