அமேசான் எக்கோ ஷோ, ஃபேஸ்புக் போர்ட்டல் மற்றும் கூகுள் நெஸ்ட் ஹப் மேக்ஸ் ஆகியவை இந்த ஆண்டின் பிற்பகுதியில் பரவலாக பயன்படுத்தப்படும் வீடியோ கான்ஃபரன்சிங் தளமான ஜூம் செயலியை ஆதரிக்கும் என்று நிறுவனம் அறிவித்த நிலையில், இந்த ஆண்டின் பிற்பகுதியில் ஜூம் பல்வேறு புதிய சாதனங்களுக்கு தங்களின் தளத்தை விரிவுப்படுத்தவுள்ளது.
கூகுள் நெஸ்ட், அமேசான் எக்கோ, ஃபேஸ்புக் போர்ட்டல் ஸ்மார்ட் டிஸ்ப்ளேக்களுக்கு வரும் ஜூம் செயலி!
கூகுள் நெஸ்ட், அமேசான் எக்கோ மற்றும் ஃபேஸ்புக் போர்ட்டல் ஸ்மார்ட் டிஸ்ப்ளேக்கள் போன்ற உதவியாளர் தொழில்நுட்ப ஸ்மார்ட் கருவிகளில் ஜூம் செயலி இந்த ஆண்டிற்குள் செயல்பாட்டுக்கு வரும் என்று அந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளது.
zoom
இதன்மூலம் பல உயர் தொழில்நுட்பத்துடன் கூடிய அழைப்புகளை பயனர்கள் மேற்கொள்ள முடியும். அதுமட்டுமில்லாமல், ஒலியை கொண்டே காணொலி அழைப்புகளை இலகுவாக மேற்கொள்ளலாம் என்றும் அந்நிறுவனங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.