டெல்லி: ஜூம் செயலி புதிய பாதுகாப்பு அம்சங்களுடன், தனது புதிய 5.0 பதிப்பை பயனர்களுக்கு மே 30ஆம் தேதி முதல் வலுக்கட்டாயமாக தரவிறக்கம் செய்ய அறிவுறித்தியுள்ளது.
பல நாடுகளிடமிருந்து, இந்த செயலியின் பாதுகாப்பு அம்சம் குறித்து வெளியான விவாதங்களின் அடிப்படையில், நிறுவனம் தங்களின் செயலியை மேம்படுத்தி புதிய பரிணாமத்தில் 5.0 எனும் பதிப்பை வெளியிடவுள்ளது.
மே 30ஆம் தேதிக்குப் பிறகு காணொலி காட்சிகள் மூலம் இணைந்து அழைப்புகளை மேற்கொள்ள இந்த புதிய பதிப்பை நிறுவினால் மட்டுமே முடியும் என நிறுவன தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் 256-பிட் குறியாக்கத்தின் மூலம் பாதுக்காப்பு அம்சம் புதிய பதிப்பில் உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக ஜூம் உறுதிபட தெரிவித்துள்ளது.
ஜூம் செயலிக்கு தடைவிதிக்கப்படுமா?
மேகவழிக் கணினி தொழில்நுட்பத்தின் அரசனான சிஸ்கோ நிறுவனத்தின் ஊழியர் தான், ஜூம் செயலியின் நிறுவனர் என்பது அறிந்துகொள்ள வேண்டிய தகவல்களில் ஒன்று.