தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / lifestyle

யூடியூப் பயன்படுத்துவதைக் குறைக்க புதிய வசதி!

வாடிக்கையாளர்கள் நீண்ட நேரம் யூடியூப்பை பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்த புதிய வசதிகளை யூடியூப் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

YouTube
YouTube

By

Published : May 22, 2020, 4:12 PM IST

கோவிட்-19 பரவல் காரணமாக பல்வேறு நாடுகளிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காரணமாக மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளதால் இணைய பயன்பாடு கணிசமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக யூடியூப், நெட்பிளிக்ஸ் போன்ற ஸ்டிரீமிங் தளங்களின் பயன்பாடு கணிசமாக உயர்ந்துள்ளது.

பயனாளர்கள் நீண்ட நேரம் ஸ்டிரீமிங் தளங்களில் தங்கள் நேரத்தைச் செலவழிக்கின்றனர். இதைக் கட்டுப்படுத்த யூடியூப் நிறுவனம், தற்போது பல்வேறு வசதிகளை வழங்கியுள்ளது. 'Take a break' என்ற வசதியை ஆன் செய்வதன் மூலம் குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் ஒருவரால் யூடியூப்பை பயன்படுத்த முடியாது.

அதேபோல 'Bedtime Reminder' என்ற வசதியைப் பயன்படுத்த இரவு நேரங்களில் யூடியூப் பயன்பாட்டைக் குறைக்க முடியும். இதன் மூலம் இரவு நேரத்தில் ஒரு குறிப்பிட்ட நேரத்தைத் தாண்டி ஒருவரால் யூடியூப்பை பயன்படுத்த முடியாது.

இந்த புதிய வசதிகள் வாடிக்கையாளர்கள் தங்கள் யூடியூப் பயன்பாடு நேரத்தை முறைப்படுத்த உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: ஃபேஸ்புக் உடன் கைகோர்க்கும் சாம்சங் இந்தியா!

ABOUT THE AUTHOR

...view details