டெல்லி:பழைய ஐஓஎஸ், ஆண்ட்ராய்டு பதிப்புகளுக்கான ஆதரவை வாட்ஸ்அப் விலக்க முடிவுசெய்துள்ளது.
பேஸ்புக் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆண்ட்ராய்டு 4.0.3, ஐஓஎஸ் 9 ஆகிய பதிப்புகளுக்கு மேல் உள்ள இயங்குதளங்களுக்கு மட்டுமே வாட்ஸ்அப் சேவை வழங்கப்படும் என்று தெரிவித்திருக்கிறது.
இதனால், ஐபோன் 4, ஐபோன் 4S, ஐபோன் 5, ஐபோன் 5S, ஐபோன் 4, ஐபோன் 4, ஐபோன் 6. ஐபோன் 6S ஆகிய கைப்பேசிகளுக்கு வாட்ஸ்அப் சேவை நிறுத்தப்படவுள்ளது.
ரூ.5000-க்குள் அசத்தலான 5 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ்!
ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்டு இயங்கும் முன்காலத்தில் ப்ரீமியம் கைப்பேசிகளாக பார்க்கப்பட்ட எச்.டி.சி டிசைர், மோடோ ட்ராய்டு ரேசர், எல்.ஜி ஆப்டிமஸ் ப்ளாக், சாம்சங் கேலக்ஸி எஸ்2 ஆகியவற்றுக்கும் வாட்ஸ்அப் செயலியின் சேவை இந்தாண்டு இறுதியுடன் நிறுத்தப்படவுள்ளது.
ஆனால், Kai OS 2.5.1 இயங்குதளம் கொண்டுள்ள குறைந்த விலை கைப்பேசிகளுக்கான வாட்ஸ்அப் ஆதரவு தொடரும் என்று அந்நிறுவனம் தனது அறிக்கையில் தெளிவுப்படுத்தியுள்ளது.