காணொலி அழைப்புகள் மூலம் சந்திப்பு கூட்டங்களை நடத்துவது என்பது, இதுமாதிரியான பெருந்தொற்று பரவிவரும் காலகட்டத்தில் பயனர்கள் அதிகம் பயன்படுத்தும் பிரதான செயலியாக இருக்கும். இதுவரையில் வாட்ஸ்அப் மூலம் 4 பேர் மட்டுமே ஒரே நேரத்தில் அழைப்புகளைப் பெறமுடியும்.
அதன் தாக்கமாக, ஃபேஸ்புக் நிறுவனத்தின் செயலியான வாட்ஸ்அப் தங்கள் பயனர்கள் எளிதாக கூட்டு அழைப்புகள் செய்ய 8 பேர் ஒரு அழைப்பில் இணையக் கூடிய வசதியை அறிமுகப்படுத்தவுள்ளது. இதற்கான சோதனையோட்டத்தை மேற்கொண்டு வரும் வாட்ஸ்அப், விரைவில் இந்த அம்சத்தை நடைமுறைக்குக் கொண்டு வரும் எனத் தெரிகிறது. இதன் பீட்டா பதிவினை ப்ளே ஸ்டோரில் பெறலாம் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது.
இதன் சோதனைப் பதிப்பை பெற பயனர்கள் வாட்ஸ்அப் பீட்டா பதிப்பை கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்ய வேண்டும். இதனைத் தொடர்ந்து செய்ய வேண்டிய வழிமுறைகளை கீழே காணலாம்.
- நீங்கள் அழைக்கும் நபரும் இதேபோன்று பீட்டா பதிப்பை தரவிறக்கம் செய்து வைத்திருக்க வேண்டும்
- அழைப்பில் இருக்கும்போது, பயனர்களின் அழைப்பு பாதுகாப்பானது என்பதை தெரிவிக்கும் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்டெட் என்று திரையில் காண்பிக்கும்
- கடந்த மாதம் மட்டும் 70% விழுக்காடு ஃபேஸ்புக் பயனர்கள் காணொலி அழைப்புகளை மேற்கொண்டுள்ளனர். அதுவே இம்மாதத்தில் இரட்டிப்பாகி உள்ளது.
விவசாயிகளுக்கான நிவாரணம் ரூ.15,000ஆக அதிகரிக்க வேண்டும் - எம்.எஸ். சுவாமி நாதன்
இதன் போட்டியாளரான ஆப்பிள் ஃபேஸ் டைம் 32 அழைப்பாளர்களை ஒரே நேரத்தில் கூட்டாக ஒன்றுசேர்க்கும் வகையில் செயலாற்றி வருகிறது. எனினும் ஃபேஸ்புக் மெசெஞ்சர் மூலம் 50 பேரை ஒரே நேரத்தில் தொடர்புகொள்ள முடியும் என்பதால், பெரும் போட்டியாக ஃபேஸ் டைம் இருக்காது என்பது ஃபேஸ்புக் நிறுவனத்தின் கணக்கீடாக இருக்கும் என்று பார்க்கப்படுகிறது.