கோவிட்-19 வைரஸ் தொற்று தற்போது உலகிலுள்ள பல்வேறு நாடுகளிலும் மிக வேகமாக பரவிவருகிறது. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளும் ஊரடங்கு உத்தரவுகளை பிறப்பித்துள்ளன.
இந்த காலங்களில் மக்கள் தங்களது பெரும்பாலான நேரங்களை சமூக வலைதளங்களிலேயே கழிப்பது இங்கிலந்தைச் சேர்ந்த காந்தர் என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக காந்தர் நிறுவனம் நடத்திய ஆய்வில், வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நாடுகளில் ஆரம்பகாலத்தில் 27 விழுக்காடும் பின்னர் 41 விழுக்காடும் இறுதி நாள்களில் 51 விழுக்காடும் வாட்ஸ்-ஆப் செயலியின் பயன்பாடு அதிகரித்துள்ளது. ஸ்பெயினில் 76 விழுக்காடு வரை வாட்ஸ்-ஆப் பயன்பாடு அதிகரித்துள்ளது.
அதேபோல, சீனாவிலும் 58 விழுக்காடு வரை அந்நாட்டின் சமூக வலைதளங்களான வீசாட் மற்றும் வெய்போவின் பயன்பாடு அதிகரித்துள்ளது. அதேபோல உலகெங்கும் ஃபேஸ்புக்கின் பயன்பாடும் 36 விழுக்காடு வரை அதிகரித்துள்ளது.