டெல்லி: 40 கோடி பயனர்களை கொண்டுள்ள வாட்ஸ்அப் நிறுவனம் இந்தியாவில் வெளியிடவுள்ள ‘வாட்ஸ்அப் பே’ செயலி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஃபேஸ்புக், இந்தியாவின் ஜியோ நிறுவனத்தின் 9.9 விழுக்காடு பங்குகளை 43 ஆயிரத்து 574 கோடி ரூபாய்க்கு வாங்கியது. இதுவே ஃபேஸ்புக் நிறுவனம் மேற்கொள்ளும் மிகப்பெரிய முதலீடாகும். இதன்மூலம் பெரிய தொழில்நுட்ப மாற்றங்கள் நிகழும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ரிலையன்ஸ் நிறுவனமும் தனது ஜியோ தளத்தின் மூலம் பல்வேறு அம்சங்கள் கொண்ட செயலிகளை பயனர்களுக்கு அறிமுகப்படுத்திவருகிறது. அதன் ஒரு பகுதியாக ஜியோமார்ட் எனும் மின் வணிக செயலியை அறிமுகப்படுத்திய ரிலையன்ஸ் நிறுவனம், வாட்ஸ்அப் செயலியுடன் இணைந்து பயணிக்கும் பட்சத்தில், பயனர்களுக்கு இலகுவான சேவை கிடைக்க வழிபிறக்கும்.