ஹைதராபாத்: ஜனவரி 6இல் வாட்ஸ்அப் செயலி பயனர்களுக்கு அனுப்பப்பட்ட புதிய திருத்தப்பட்ட விதிமுறைகள் மற்றும் தனியுரிமைத் கொள்கைகள் குறித்து அறிந்து கொள்ளலாம்.
அதில் கூறப்பட்டுள்ள தகவல்கள் என்னென்ன:
- வாட்ஸ்அப் சேவைகள் மற்றும் தரவு செயல்பாடு
- வாட்ஸ்அப் பயனர் தகவல்களை, தாய் நிறுவனமான பேஸ்புக் கையாளும் விதம்
- பேஸ்புக் உடன் இணைந்து பயனர்களுக்கு அளிக்கப்படும் சலுகைகள் மற்றும் சேவைகள்
- எப்போது இதன் புதிய பதிப்பு செயல்பாட்டுக்கு வரும்
இவை அனைத்தும் வாட்ஸ்அப் அனுப்பிய அறிக்கையில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மேம்படுத்தப்பட்ட விதிமுறைகள் மற்றும் தனியுரிமை கொள்கைகள் குறித்த பதிப்பு பிப்ரவரி 8ஆம் தேதி முதல் பயனர்கள் கைப்பேசிகளில் நிறுவமுடியும் என்று நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
2020ஆம் ஆண்டின் சிறந்த ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள்!
இதுகுறித்து பேசிய சைபர் பாதுகாப்பு நிபுணரும், சைபர் செக்யூரிட்டி அசோசியேஷன் ஆஃப் இந்தியாவின் இயக்குநருமான இந்திரஜித் சிங், “வாட்ஸ்அப் நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய பாதுகாப்பு கொள்கைகள் பயனர்களின் தரவுகளுக்கான பாதுகாப்பை விலக்கும் நோக்கில் உள்ளது.
என்னதான் நிறுவனம் எண்ட் டு எண்ட் என்கிரிப்ஷன் பாதுகாப்பு தங்களின் பயனர்களுக்கு கொடுத்திருப்பதாகக் கூறினாலும், இதன் புதிய கொள்கைகள் பயனர்கள் பாதுகாப்பை சிதைப்பதாகவே உள்ளது. அதாவது, ‘வேறு நிறுவனங்கள் தங்கள் பயனர்களின் தரவுகளை அணுகமுடியாத வண்ணம் கட்டமைத்துவிட்டு, தாங்கள் மட்டும்தான் தங்கள் பயனர் தரவுகளை திருடுவோம் என்பதுபோல் உள்ளது.
வாட்ஸ்அப்பின் திருத்தப்பட்ட விதிமுறைகள், தனியுரிமைக் கொள்கைகள் இங்கு பயனர்களை தங்கள் செயலிகளை இலவசமாக அணுகவிட்டு, அவர்களை தங்கள் நிறுவன வளர்ச்சிக்கான பொருள் போல பேஸ்புக் நிறுவனம் கையாளுகிறது. இது மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்” என்று எச்சரிக்கிறார்.