தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / lifestyle

வாட்ஸ்அப்பின் அடுத்த அதிரடி - வாயைப் பிளந்த பயனாளர்கள்!

பிரபல சாட்டிங் செயலியான வாட்ஸ்அப் தனது பீட்டா பதிப்பில், வாடிக்கையாளர்களைக் கவர புதிய ஒரு வசதியைச் சோதித்து வருகிறது.

Whatsapp

By

Published : Oct 3, 2019, 6:13 PM IST

உலகெங்கும் கோடிக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்பட்டுவரும் பிரபல சாட்டிங் செயலியான வாட்ஸ்அப் தற்போது v2.19.275 என்று ஆண்டிராய்ட்டும் மொபைல்களுக்கு புதிய ஒரு பீட்டா பதிப்பை வெளியிட்டுள்ளது. அதில் பயனாளர்களைக் கவரப் புதிதாக, நாம் அனுப்பும் மெசேஜுகளை Auto Delete செய்யும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

வாட்ஸ்அப்பிலுள்ள optionஇல் இந்த Disappearing Message என்ற வசதி புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளது. அதன்படி வாடிக்கையாளர்கள் தங்களுக்குத் தேவையான நேரத்தைத் தேர்ந்தெடுத்தால், அந்த குறிப்பிட்ட நேரத்துக்கு பின் மெசேஜ்குள் Auto delete செய்யப்படும்.

new Auto delete feature

மேலும், இப்போது இந்த சேவை சோதனையிலுள்ளதாகவும், இதிலுள்ள குறைகள் அனைத்தும் களையப்பட்டு விரைவில் அனைத்து பயனாளர்களுக்கும் வழங்கப்படும் என்றும் WABetainfo என்ற தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த Auto Delete ஆப்சன், மற்றொரு பிரபல சாட்டிங் செயலியான Telegramஇல் ஏற்கனவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே: பிட்காயினை வீழ்த்திய புதிய கிரிப்டோகரன்சி!

ABOUT THE AUTHOR

...view details